பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை (மார்ச் 31) தனது பிடிஐ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தான் தோல்வியை ஏற்காமல் இறுதிவரை போராடுவேன் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், "நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, நான் கடைசி பந்து வரை விளையாடும் வரை விளையாடியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில்லை. நான் துவண்டு விடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் கடைசி வரை போராடுவேன்" என்றார்


அவர் மேலும் கூறுகையில்,  “நான் அரசியலில்  இணைந்த போது, ​​நீதி, மனிதாபிமானம் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய மூன்று நோக்கங்களை என் குறிகோளாக கொண்டு வந்தேன்” என்றார் இம்ரான் கான்.


"இறைவன் எனக்கு புகழ், செல்வம், அனைத்தையும் கொடுத்தது எனது அதிர்ஷ்டம். இன்று எனக்கு எதுவும் தேவையில்லை, அவர் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தார், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பாகிஸ்தான்  நாடு உருவான 5 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவன், நான் நாட்டைச் சேர்ந்தவன். சுதந்திரத்திற்குப் பிறகு பிறக்கும் நாட்டின் 1வது தலைமுறை" என்று இம்ரான் கான் கூறினார்.


மேலும் படிக்க | இம்ரான்கானிற்கு வலுக்கும் சிக்கல், கீழவையில் இம்ரானில் அரசு பெரும்பான்மையை இழந்தது..!!


பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342  உறுப்பினர்கள் கொண்ட கீழ்சபையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற இம்ரான் கானுக்கு 172 வாக்குகள் தேவை.  ஆனால்,, ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான், எதிர்க்கட்சிக்கு 175  உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், அதனால் கான் பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.


சுவாரஸ்யமாக, எந்தவொரு பாகிஸ்தான் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை வெற்றிகரமாக முடிக்கவில்லை என்பதோடு, எந்த ஒரு பிரதமரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் வெளியேற்றப்படவும் இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் சவாலை எதிர்கொள்ளும் மூன்றாவது பிரதமர் இம்ரான் கான்  என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயலும் இம்ரான் கான்; தப்பிக்குமா இம்ரானின் நாற்காலி..!!


இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தை அகற்ற  கூட்டணி கட்சிகளான முத்தஹிதா குவாமி இயக்கம் (MQM) மற்றும் பலுசிஸ்தான் அவாமி கட்சி (BAP) ஆகிய இரு கட்சிகளும் எதிர்க்கட்சிகளுடன் கை கோர்த்ததால் பிரச்சனைகள் அதிகரித்தன.


இருப்பினும், கான் அரசின் அமைச்சர்கள் அவர் "கடைசி ஓவரின் கடைசி பந்து" வரை போராடுவார் என்று உறுதியளித்துள்ளனர்.


மேலும் படிக்க | Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR