இந்திய ராணுவத்துக்கு பிரதமர் நவாஸ் செரீப் கண்டனம் தெரிவித்து உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என்று இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநர் அறிவித்ததை தொடர்ந்து..


பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த நவாஸ் செரீப் கூறுகையில்:- நாங்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம், நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதை பலவீனமாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்,” என்று கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. எங்களுடைய நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுடைய இரண்டு ராணுவ வீரர்களை உயிர்நீக்க செய்த இந்திய ராணுவத்தின் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


 



 


கவாஜா முகமது ஆசிப் பேசுகையில்:- பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா முகமது ஆசிப் பேசுகையில் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய மக்கள் மற்றும் மீடியாக்களை திருப்தி படுத்த இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்திவிட்டு, அதற்கு வேறு சாயத்தை பூச முயற்சி செய்து உள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் சிறிய ரக ஆயுதங்களை பிரயோகப்படுத்தியது, இதில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது, எல்லையில் அத்துமீறலை எதிர்க்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.