பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அந்த தகவலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்று இருந்தது.


இதனையடுத்து இதுதொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 28-ம் தேதி, பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் விவகாரத்தில் ஈடடுபட்ட நவாஷ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்தது. மேலும் பனாமா ஊழல் விவகாரத்தில் நவாஷ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.


பதவி விலகிய அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்கள் அனுப்ப பட்டது. ஆனாலும் தனது மனைவியின் உடல்நிலை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவருக்கு கடந்த 26-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக அவர் நேற்று அவர் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார். இதையடுத்து இன்று நீதிமன்றத்திக்கு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியமும் வந்தார்கள்.