பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவு அடைந்து, இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் இன்று பாகிஸ்தான் சுபீர்ம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. 


அதில்,  நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை வழக்கை உத்தரவிட்டுள்ளது. கூட்டு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் எனவும், புலனாய்வு குழு விசாரணைக்கு நவாஸ்  ஷெரீப் அவரது இரண்டு மகன்கள் ஆஜராக வேண்டும்  என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், 60 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.  


அடுத்த ஆண்டு அங்கு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்  தீர்ப்ப்பால் நவாஸ் ஷெரீப்புக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.