இன்றைய காலகட்டம் செயற்கை நுண்ணறிவின் ( AI)காலம். AI எல்லாவற்றையும் சாத்தியமாக்குவதாகக் கூறும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.  AI என்னும் செயற்கை நுண்ணறிவின் முற்றிலும் அசாதாரணமான திறன்களை உலகம் கண்டுள்ளது. உலகில் தொழில்நுட்பம் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், மனிதா்களைப் போலவே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள், AI இன் உதவியுடன் முடமான ஒரு மனிதனின் உடலின் கீழ் பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளைக்கும் தண்டு வடத்திற்கும் இடையிலான தொடர்பு


2011 ஆம் ஆண்டு முதல் இடுப்பிலிருந்து கீழே செயலிழந்த ஜெர்ட் ஜான் ஆஸ்கம் என்ற அந்த நபர், தனது வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இதற்காக அவர் ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த 40 வயது நபர் தனது எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி தனது உறுப்புகளின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றார். அவரது மூளைக்கும் தண்டு வடத்திற்கும் இடையிலான தொடர்பை மீண்டும் இணைத்த இரண்டு சிப்கள்  மூலம் இது சாத்தியமானது.


'டிஜிட்டல் பிரிட்ஜ்' வழி ஏற்படுத்தப்பட்டது


"இடுப்பிற்கு கீழே நான் பல ஆண்டுகளாக " என்று ஓஸ்கம் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார். ஆனால் இப்பொழுது நான் என் கைகளை நகர்த்த முடியும். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்என்றார். என்னால் இனி நடக்க முடியாது நினைத்திருந்தேன். இதனை என்று நம்பவே இல்லை. பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒஸ்காமின் மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே டிஜிட்டல் பாலத்தை உருவாக்க புதிய வழியைக் கண்டறிந்துள்ளது. இந்த பாலம் அவருக்கு எல்லா காயங்களையும் கடந்து மீண்டும் நடக்க உதவியது.


10 வருட கடின உழைப்பு


2011 ஆம் ஆண்டு சைக்கிள் விபத்தில் ஒஸ்காம் செயலிழந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்த விஞ்ஞானிகளின் கடின உழைப்பின் விளைவாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குழுவில் உள்ள நரம்பியல் விஞ்ஞானி க்ரிகோயர் கவுர்டைன், எண்ணங்களைச் செயலாக மாற்றும் டிஜிட்டல் பாலம் மூலம் தகவல் தொடர்புகளை மீட்டெடுக்க முடிந்தது என்றார். கால்களில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் உள்வைப்பதன் மூலம் இது சாத்தியமானது.


மேலும் படிக்க | பொய் பேசினால் கண்டுபிடிக்கும் கருவி..! இனி யாரும் தப்ப முடியாது


அதிசயங்கள் நிச்சயம் வரவேற்க தக்கதே


நவீன தொழில்நுட்பங்கள் மனிதா்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வரும்m நிலையில், இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளிக்கும் . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் பலா் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதனால் ஏற்படும் இது போன்ற அதிசயங்கள் நிச்சயம் வரவேற்க தக்கதே.


செயற்கை நுண்ணறிவு சாதகமும் பாதகமும்


எனினும், மனிதா்களின் வாழ்க்கை முறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிமைப்படுத்தும் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலையிழப்புக்குப் பெரிய அளவில் வழிகோலாது. மாறாக, மக்களின் பணிச் சுமையை பெருமளவில் குறைக்கும். மேலும்,  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தரவுப் பாதுகாப்பு மிக முக்கியமானது.  எனினும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அதிக தரவுகள் தேவைப்படும் என்பதால், அவ்வாறு சேமிக்கப்படும் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் சிலர் எச்சரிக்கின்றனர்.


மேலும் படிக்க | Chat GPT: AI செயலிகள் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள்..! மக்களே உஷார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ