செயற்கை நுண்ணறிவு ராஜ்ஜியம்
பொய் சொல்லாத நபர்களே இருக்க முடியாது. எல்லோரும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளில் தொடங்கி, மாத்திரை விழுங்க சிரமப்படும் பாட்டி வரை எங்கும் எந்நேரத்திலும், எல்லா சூழலிலும் பொய் வியாபித்திருக்கும். ஆனால் அதற்கும் இப்போது ஆப்பு வைத்துவிட்டார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஏஐ தொழில்நுட்பம் பொய் சொல்வதை கண்டுபிடித்துவிடுமாம். சாட்ஜிபிடி வருகைக்கு பின்னால் தொழில்நுட்பத்தால் எல்லாம் சாத்தியமே என்ற நிலை உருவாகிவிட்டது. தனிப்பட்ட பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிட்டாலும், ஏஐ தொழில்நுட்பங்கள் பரவுவதை தடுக்க முடியாது என்கிறது தொழில்நுட்ப உலகம்.
தொழில்நுட்ப உலகில் புரட்சி
அதன் ஆபத்து, வீரியம் எல்லாம் இந்த உலகம் கட்டாயம் எதிர்கொண்டே தீர வேண்டிய சூழல் உருவாகிவிட்டதாகவும் எச்சரிக்கின்றனர் ஏஐ தொழில்நுட்ப வல்லுநர்கள். 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவை அடிகோடிடப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை ChatGPT-க்கு முன், ChatGPT-க்கு பின் என்று பிரிக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து பல AI கருவிகள் இப்போது உலகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Flipkart Big Saving Days Sale: ஐபோனில் அதிரடி தள்ளுபடி, வாங்க தயாரா?
பொய்யை கண்டுபிடிக்கும் கருவி
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகம் செல்வோர் வேறு ஏதாவது வேலை இருந்தால், அல்லது போர் அடிக்கிறது என தோன்றினால், உடம்பு சரியில்லை அல்லது பாட்டி இறந்து விட்டார்கள் என பொய் கூறி விடுமுறை எடுப்பார்கள். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய AI கருவி மூலமாக ஒருவர் பொய் சொல்வதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நாம் பேசுவதை வைத்தே நமக்கு சளி இருக்கிறதா இல்லையா, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதெல்லாம் இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் கண்டுபிடித்துவிடும்.
ஜெர்மன் வல்லுநர்கள் கண்டுபிடிப்பு
ரெனிஷ் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸ் ஜெர்மனி மற்றும் சூரத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆய்வாளர்கள் இணைந்து இந்த AI கருவியை உருவாக்கியுள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்பதை கண்டறிய 630 நபர்களின் குரலை ஆய்வு செய்துள்ளனர். அதில் 111 நபர்களுக்கு நிஜமாகவே சளி இருந்துள்ளது. அவர்கள் பேசும் தொனியை வைத்தே அவர்களுக்கு சளி இருக்கிறதா இல்லையா என்பதை AI கருவி மிகத்துல்லியமாக கண்டுபிடித்துள்ளது.
சோதனையில் மிகப்பெரிய வெற்றி
சோதனையில் கலந்து கொண்டவர்களிடம் மேலும் சில கேள்விகளை கேட்டு அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை வைத்தே சொல்வது பொய்யா மெய்யா என்பதை கண்டறிந்துள்ளது இந்த AI. இந்த ஆய்வின் முடிவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் துல்லியத்தன்மையுடன் இந்த கருவி செயல்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதன் சதவீதத்தை மேலும் அதிகரிக்க சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த கருவி மூலம் பொய் சொல்வதைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள் இல்லாமலேயே ஜலதோஷம் போன்றவற்றை ஒருவர் பேசுவதை வைத்தே எளிமையாக அடையாளம் காணலாம். வரும் காலங்களில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அருகே செல்லாமலேயே, ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
இது ஒருபுறம் மிகப்பெரிய வரமான தொழில்நுட்ப கருவியாக இருந்தாலும், சளி காய்ச்சல் என சொல்லி இனி லீவ் போட முடியாதே என புலம்பிக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகப்படுத்திய PHANTOM V Fold 5G! என்ன சிறப்பம்சங்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ