பெய்ஜிங்: சீனாவில் பரவும் கொடிய கரோனா வைரஸ் குறித்து உலகின் பல நாடுகள் கவலை கொண்டுள்ளன. ஆனால் சீனாவில் நிலைமை என்னவென்றால், அங்கு ஒவ்வொரு நபரும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள். உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள, வைரஸ் பாதிக்கப்படாத நகரங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விமான நிறுவனங்களும் பயப்படுகின்றன. இதன் விளைவால் சீனாவின் நாஜிங் நகரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெற்றோர் தங்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு தனியாக விமானத்தில் ஏறினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் இந்த வைரஸ் காரணமாக 26 பேர் இறந்துள்ளனர் மற்றும் 14 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 4.1 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரயில்கள், பேருந்துகள், விமான நிலையங்கள் போன்றவற்றையும் நிர்வாகம் தீவிரமாக பரிசோதித்து வருகிறது.


சீன ஊடகங்கள் அளித்த தகவலில் படி, தம்பதியினர் இரண்டு குழந்தைகளுடன் நஜிங் விமான நிலையத்தில் உள்ள சாங்சா நகருக்குச் சென்றனர். காய்ச்சல் காரணமாக அவரது மகனுக்கு விமானத்தில் உட்கார அனுமதிக்கப்படவில்லை. குழந்தைகளின் பெற்றோர் புறப்படும் வாயிலைத் தடுத்து, குழந்தைகளை அழைத்துச் செல்வதில் பிடிவாதமாக இருந்தனர். இதற்கிடையில், காவல்துறையினர் அவர்களிடம் பேசினார்கள். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு விமானத்தில் அமர்ந்தனர். இது விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களையும் பயணிகளையும் ஆச்சரியப்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன, அதில் இரண்டு குழந்தைகள் விமான நிலையத்தில் தனியாக காணப்படுகிறார்கள். இருப்பினும், சிறிது நேரம் கழித்து விமான நிறுவனம் ஒப்புக் கொண்டு, குழந்தைகளை விமானத்தின் அறையில் உட்கார அனுமதித்தது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.