மியான்மார் நாட்டின் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூச்சி. இன்று இவரது மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற போது ஆங் சான் சூச்சி மாளிகையில் இல்லை. சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வதற்குள் பெட்ரோல் குண்டு வீசிய மர்ப நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், இதைக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட மாளிகையில் தான் ஆங் சான் சூச்சி, 15 ஆண்டு காலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். மொத்தம் 21 வருட சிறைவாசம் அனுபவித்த ஆங் சான் சூச்சி 2010-ம் ஆண்டு விடுதலை ஆனார்.


ரோகிங்ய முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் இவருக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


இந்தியாவின் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ஆங் சான் சூச்சி கலந்துக்கொண்டார் குறிப்பிடத்தக்கது.