கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கும் ‘No Petrol’; 7 மணி நேர காத்திருப்பு வீணானது..!
கிறிஸ்டியானோ ரொனால்டோ பெட்ரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது விலை உயர்ந்த பென்ட்லி காருடன் எரிபொருள் விற்பனை நிலையத்தை அடைந்தார்.
லண்டன்: பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பிரிட்டனில் பெட்ரோல் நெருக்கடியில் இருந்து தப்ப இயலவில்லை. அவரது டிரைவர் பெட்ரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிலையத்தில் சுமார் ஏழு மணி நேரம் காத்துக் கொண்டு நின்றார். ஆனால், அவர் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது. பிரிட்டனில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் பற்றாக்குறை நிலவுகிறது. நாட்டின் 90% க்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் தீர்ந்து போய் விட்டது.
ரொனால்டோ காருக்கு பெட்ரோல்
மான்செஸ்டர் யுனைடெட் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) மிக உயர்ந்த பெண்ட்லி கார் மான்செஸ்டரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நின்றிருந்தது. பெட்ரோல் டாங்கை நிரப்ப பெட்ரோல் பம்பிற்கு ரொனால்டோவின் டிரைவர் காரை கொண்டு வந்திருந்தார். மழைக்கு இடையே ஏழு மணி நேரம் காத்திருந்தும் அவருக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை. கால்பந்து வீரர் ரொனால்டோவின் பென்ட்லி கார் 220,000 பவுண்டுகள் (இரண்டு கோடி ரூபாய்க்கு மேல்) மதிப்பிலானது. காரில் ரொனால்டொ இல்லை. அவரது ட்ரைவர் மட்டுமே வந்திருந்தார்.
ALSO READ | இங்கிலாந்தில் கடும் எரிபொருள் நெருக்கடி; ராணுவத்தை ஈடுபடுத்த ஆலோசனை
பிற்பகலில் வந்த ட்ரைவர், இரவில் தான் திரும்பினார்
'தி சன்' அறிக்கையின்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) டிரைவர், பென்ட்லி காரை எடுத்துக் கொண்டு புதன்கிழமை மதியம் 2.20 மணிக்கு எரிபொருள் நிலையத்தை அடைந்தனர். சுமார் ஏழு மணி நேரம் காத்திருந்தும் எரிபொருள் டேங்கர் வராததால், டிரைவர் எரிபொருள் கிடைக்காமல், கோபத்த்துடன் அங்கிருந்து சென்றார். இருப்பினும், டேங்கர் வந்திருந்தாலும், ரொனால்டோவின் பென்ட்லியின் டேங்க் நிரம்பியிருக்காது. ஏனென்றால் பெட்ரோல் பம்ப் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஒரு வாகனத்திற்கு 30 பவுண்டுகள் மதிப்பில் மட்டுமே பெட்ரோல் வாங்கலாம் என வரம்பை நிர்ணயித்துள்ளது.
ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!
போர்ச்சுகலின் புகழ்பெற்ற வீரர் ரொனால்டோ ஆடம்பர கார்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளனர். சமீபத்தில் புதிய வரவாக, பென்ட்லி அவரது சூப்பர் கார்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. கடந்த வாரம் மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சி மைதானத்தில் அவர் அதை ஓட்டி வந்தார். ரொனால்டோ கார்களை மிகவும் பிடிக்கும். அவரிடம் தற்போது ஃபெராரி, லம்போர்கினி, மெக்லாரன்ஸ், இரண்டு ரோல்ஸ் ராய்ஸ், ஒரு போர்ஷே 911 டர்போ எஸ், ஒரு கோனிக்செக் CCX, ஒரு பென்ட்லி கான்டினென்டல், ஒரு ரேஞ்ச் ரோவர் மற்றும் பல ஆடிஸ் மற்றும் மெர்சிடிஸ் ஆகியவை உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR