கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி நகரில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 100 பேர் பயணித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஜகஸ்தான் நாட்டின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. இந்த விமானத்தில் 95 பயணிகள், 5 ஊழியர்கள் என 100 பேர் பயணித்ததாக தெரிகிறது. இந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வீடுகள் இடிந்து விழுந்தன. விமானத்தின் ஒரு பகுதி நொறுங்கியது. 


இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.



விமானம் விழுந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. விமான நிலையத்தில் இருந்து விமானம் டேக்ஆப் ஆனபோது போதிய உயரத்திற்கு எழும்பாததால், கான்கிரீட் வேலியில் மோதி பின்னர் அதனை ஒட்டியுள்ள 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விபத்தில் சிலர் உயிர் தப்பியதாக நகர விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவு தெரிவிக்கிறது. மேலும் சம்பவ இடத்தில் தீ இல்லை எனவும், தப்பிப்பிழைத்தவர்களை வெளியேற்றுவதற்காக அவசர சேவைகள் செயல்பட்டு வருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.