ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை குறிப்பிட்ட பிரதமர் மோடி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிட்னியில் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்தார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அவுஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், 'ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்து நானும், பிரதமர் அல்பனீசும் விவாதித்தோம். இன்றும் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினோம். இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவு மற்றும் வலுவான உறவுகளுக்கு அவர்களின் செயல்பாடுகள் அல்லது கருத்துக்களால் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கூறுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். எதிர்காலத்திலும் இதுபோன்ற கூறுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக இன்று பிரதமர் அல்பனீஸ் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக இந்துக் கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்கள் அதிகம். ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்து கோவில்களை குறிவைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்
ஆஸ்திரேலியாவில் தாக்கப்பட்ட இந்து கோவில்கள்
மார்ச் மாதம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நான்காவது சம்பவம் இதுவாகும். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அட்மிரால்டி மாளிகையில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய மரியாதை அளிக்கப்பட்டது. ஒரு நாள் முன்னதாக, சிட்னியில் நடந்த ஒரு மெகா நிகழ்வில் இந்திய சமூகத்தினரிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அரினா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அல்பனீசும் கலந்து கொண்டார்.
லிட்டில் இந்தியா
மேலும், பிரதமர் மோடி தனது உரையில், சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஹாரிஸ் பூங்காவை 'லிட்டில் இந்தியா' என்று அறிவிப்பதற்கு ஆதரவளித்த ஆஸ்திரேலியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, புலம்பெயர்ந்தோரின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பிரிஸ்பேனில் இந்தியா, தூதரகத்தைத் திறக்கும் என்றார். மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் யோகாசனம், கிரிக்கெட் ஆகியவற்றால் நீண்டகாலமாக இணைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
அல்பானீஸ் பிரதமர் மோடியை 'பாஸ்' என்று அழைத்தார்
பிரதமர் மோடியின் உரைக்கு முன், அல்பானீஸ் அவரை 'பாஸ்' என்று அழைத்தார். பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டு, வலுவான இந்தியா-ஆஸ்திரேலியா உறவை குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை அந்நாட்டின் 'கலாச்சார தூதர்கள்' என்று வர்ணித்தார். பிரிஸ்பேனில் இந்திய துணை தூதரகத்தை திறப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ