ஜோகன்னஸ்பர்க்: இந்தியா மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்ப பாய்ச்சலை எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆண்டுகளில் உலகின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா உருவாகும் என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் பேசிய பிரதமர், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"தற்போதைய காலத்திலும் கோவிட் தொற்று நோய் தொடர்பான சவால்களுக்கு மத்தியில் உலகம் பல பொருளாதார சவால்களை கையாள்கிறது. இது போன்ற காலங்களில் மீண்டும் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு முக்கியமானது," என்று அவர் கூறினார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் உரையாடலில் அவர் ஆற்றிய உரையில், இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும், வரும் ஆண்டுகளில் உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும் என்றும் கூறினார்.


"உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு இருந்தாலும், இன்று இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. மிக விரைவில் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். வரும் ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி இயந்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம் இந்தியா, உலக நாடுகளின் நெருக்கடி மற்றும் சிரமங்களை போக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாக மாற்றியுள்ளது.இந்திய மக்கள் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற உறுதி பூண்டுள்ளனர்" என்று பிரதமர் மோடி கூறினார்.


பிரதமர் மேலும் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம், மேலும் இந்த காரணிகள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதை தொடர்ந்து மேம்படுத்த உதவியுள்ளன. நாங்கள் கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களால், முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நேரடி பலன் பரிமாற்றத்தின் மூலம் 360 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


"இன்று ஒரே ஒரு கிளிக்கில் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் நேரடியான பணப் பலன்களைப் பெறுகின்றனர். இது சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது, ஊழல் மற்றும் இடைத்தரகர்களைக் குறைத்துள்ளது. ஒரு ஜிகாபைட் டேட்டாவின் விலையில் இந்தியா மிகவும் சிக்கனமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இன்று இந்தியாவில் UPI பயன்படுத்தப்படுகிறது. தெரு வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை  இன்று உலகின் அனைத்து நாடுகளிலும், அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறும் நாடு இந்தியா. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் இந்த தளத்தில் இணைகின்றன. பிரிக்ஸ் நாடுகளுடனும் இணைந்து இதில் பணியாற்றுவதற்கான பல வாய்ப்புகள் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.


இதற்கிடையில், இந்தியாவின் உள்கட்டமைப்பில் பெரிய அளவிலான முதலீடு காரணமாக நாட்டின் சூழ்நிலை மாறுகிறது எனவும் பிரதமர் வலியுறுத்தினார். "இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்கட்டமைப்பிற்காக சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளோம். இந்த முதலீட்டின் மூலம், எதிர்காலத்தின் புதிய இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இரயிலின் அனைத்துப் பகுதிகளிலும் விரைவான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவர் மேலும் கூறுகையில், இன்று இந்தியாவில் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.


மேலும் படிக்க | சந்திரயான் 3: எல்லாம் தோல்வியடைந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் - எப்படி?


மேலும், முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி திறனுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். "தளவாடச் செலவைக் குறைப்பதால் இந்தியாவின் உற்பத்தித் துறை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகத் தலைமை நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சூரிய ஆற்றல், காற்றாலை, மின்சாரம் போன்ற துறைகளில் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்." என்று அவர் கூறினார். இயற்கையாகவே, இது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பத்திற்கான பெரிய சந்தையை உருவாக்கும். இன்று இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உள்ளன என்றார். "மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்" என்ற பார்வையை வலியுறுத்தி, ஐடி, டெலிகாம், ஃபின்டெக், ஏஐ மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற துறைகளில் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்றார்.


"இந்த முயற்சிகள் அனைத்தும் சாமானிய மக்களின் வாழ்வில் நேரடியான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மக்களின் வருமானம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது," என்று வணிக மன்றத்தில் அவர் கூறினார். அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் வலுவான பங்களிப்பு இருப்பதாக கூறினார். தகவல் தொழில்நுட்பம் முதல் விண்வெளி வரை, வங்கித்துறை முதல் சுகாதாரம் வரை பெண்களும் ஆண்களுடன் தோளோடு தோளாக இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றனர். மேலும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்குமாறு அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


தென்னாப்பிரிக்காவின் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்ட போதிலும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொண்டார். வர்த்தக மன்றம் முடிந்தவுடன், பிரதம மந்திரி நரேந்திர மோடி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள சம்மர் பிளேஸ் வந்தடைந்தார், அங்கு குழுவின் தலைவர்கள் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள மற்றும் தீர்க்க BRICS தளத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை ஆராய்வார்கள். .


ஜோகன்னஸ்பர்க்கில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை முன்னதாக தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வரவேற்றார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.


பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்காவிற்கு இது மூன்றாவது பயணம் ஆகும், மேலும் இந்த பயணம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான தூதரக உறவின் 30 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த ஆண்டு BRICS தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ் உள்ளது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள்: "பிரிக்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா: பரஸ்பர வேகமான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய பலதரப்புக்கான கூட்டு" என்பதாகும்.


மேலும் படிக்க | சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்களை பெருமையுடன் பகிர்ந்த இஸ்ரோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ