இந்தியா - சீனா இடையேயான உறவுகளை வலிமையாகும்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வுஹன் ஈஸ்ட் ஏரியில் ஒரு படகு வீட்டில் பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறை பயணமாகவும், உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ளார். சீனா வேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த நிலையில், சீன நாட்டின் பிரபல வலை தளம் வெய்போவில் பிரதமர் மோடி, சீன அதிபருடனான சந்திப்பு பற்றிய தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், வுஹானில் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் விரிவான மற்றும் பலன் தரும் பேச்சுவார்த்தையினை நடத்தினோம். இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான கருத்துகளை பரிமாறி கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
சீன வரலாறு மற்றும் கலாசாரத்தின் இல்லம் ஆக திகழும் ஹுபெய் மாகாண மியூசியத்தில் என்னுடன் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு பார்வையிட்டதற்காக அவருக்கு நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, தற்போது பிரதமர் மோடி அதிபர் ஜி ஜின்பிங் உடன் பாலிவுட் இசையை ரசித்து வருகிறார்.
கடந்த வருடம் டோக்லாம் விவகாரத்தில் தங்களது பலத்தினை வெளிப்படுத்தும் வகையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இந்த பகுதியில் நிறுத்தப்பட்டது இரு தரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பதுடன் இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளின் உறவுகளில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.