நிரவ் மோடி மீது ஹாங்காங் கோர்ட்டில் வழக்கு!
வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு எதிராக ஹாங்காங் ஐகோர்ட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது...!
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், போலி உத்தரவாத கடிதம் அளித்து சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வைர வியாபாரிகள் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி வழக்குப்பதிவு செய்வதற்கு முன் வெளிநாட்டிற்கு தப்பி சென்றனர்.
பண மோசடி செய்துவிட்டு ஹாங்காங்கில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை, தங்களிடம் ஒப்படைக்க வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், ஹாங்காங் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், நிரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹாங்காங் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. நிரவ் மோடிக்கு சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் உள்ள கோர்ட்களில் வழக்கு தொடரவும் அந்த வங்கி முடிவு செய்துள்ளது...!