Mehul Choksi: டொமினிகா நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஸிக்கு ஜாமீன் மறுப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கில் தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, 2018 முதல் ஆன்டிகுவாவில் வசித்து வரும் நிலையில், சென்ர மாதம் மர்மமான முறையில் காணாமல் போனார்.
புதுடெல்லி: இந்தியாவை உலுக்கிய ₹13,500 கோடி ரூபாய் பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கில் தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, 2018 முதல் ஆன்டிகுவாவில் வசித்து வரும் நிலையில், சென்ற மாதம் மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர் டொமினிகாவில் போலீஸாரிடம் அகப்பட்டார்.
டொமினிகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தப்பியோடிய வைர வியாபாரியான மெஹுல் சோக்ஸிக்கு (அங்குள்ள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளதாக உள்ளூர் ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது. "சட்டவிரோதமாக நாட்டிற்கு நுழைந்ததன்" காரணமாக மெகுல் சோக்ஸி டொமினிகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சோக்சியின் (Mehul Choksi) வழக்கறிஞர்கள், ஆன்டிகுவாவில் உள்ள ஜாலி துறைமுகத்திலிருந்து மெகுல் சோக்ஸி கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தனர். டொமினிகாவில் உள்ள சோக்சியின் வழக்கறிஞரான வெய்ன் மார்ஷ், மெகுல் கோஸி ‘கடுமையாக தாக்கப்பட்டு’ கடத்தப்பட்டு டொமினிகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஆண்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து, டொமினிகாவிற்கு (Dominica) தொழிலதிபர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க "உலகளாவிய அதிகார வரம்பு" விதியின் கீழ் லண்டனில் உள்ள பெருநகர காவல்துறையை சோக்ஸியின் சட்டக் குழு அணுகியுள்ளது.
ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை
சொக்ஸியை சித்திரவதை செய்ததாகக் கூறி, இங்கிலாந்தின் பெருநகர காவல்துறையின் போர்க்குற்றப் பிரிவில் புகார் அளித்ததாக சோக்சிக்காக வாதாடும் சட்டக் குழுவில் உள்ள மைக்கேல் போலக் தெரிவித்தார்.
முன்னதாக, மெஹுல் சோக்ஸியின் மனைவியான ப்ரிதி சோக்ஸி, தனது கணவர் காணாமல் போனது, முற்றிலும் ஆண்டிகுவா அரசு நடத்திய கடத்தல் நாடகம், எனவும் அது அம்பலமாகி முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்பதே உண்மை எனவும் குற்றம் சாட்டினார்.
மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது மருமகன் நிரவ் மோடி (Nirav Modi) ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ .13,500 கோடி பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ALSO READ | ஆண்டிகுவா நடத்திய கடத்தல் நாடகம் தோல்வி: மெகுல் சோக்ஸியின் மனைவி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR