மெகுல் சோக்ஸியின் உடலில் `காயங்கள்`; டொமினிகாவிற்கு கடத்தி செல்லப்பட்டாரா?
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தப்பியோடிய குற்றவாளியான மெகுல் சோக்ஸியின் உடலில் ‘துன்புறுத்தியதற்கான அடையாளங்கள்’ இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய ₹13,500 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த மோசடியில், முக்கிய குற்றவாளியான மெகுல் சோக்ஸி (Mehul Choksi), இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார். 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி தனது குடும்பத்தினருடன் தப்பி சென்றார். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
இந்நிலையில், நிரவ் மோடியின் நெருங்கிய உறவினர், மெகுல் சோக்ஸியை சென்ற ஞாயிற்று கிழமை முதல் காணவில்லை என தகவல்கள் வெளியானது. பின்னர் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையில் மெஹுல் சோக்ஸி டொமினிகா போலீஸாரிடம் பிடிப்பட்டார்.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியில் தப்பியோடிய குற்றவாளியான மெகுல் சோக்ஸியின் உடலில் ‘துன்புறுத்தியதற்கான அடையாளங்கள்’ இருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய கண்களை வீங்கி இருந்ததோடு, உடலில் பலத்த காயங்கள் உள்ளதாக அவர் கூறினார்.
கீதஞ்சலி குழுமத் தலைரான மெகுல் சோக்ஸியை பலர் ஒன்றாக சேர்ந்து, அவரை வலுக்காயமாக அழைத்துச் சென்று, ஆன்டிகுவாவில் ஒரு கப்பலில் ஏறுமாறு கட்டாயப்படுத்தி, பின்னர் டொமினிகாவுக்கு அழைத்துச் சென்றதாக, மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறினார்.
டொமினிகா என்ற தீவு, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு அருகில் அமைந்து உள்ளது. செவ்வாயன்று WION தொலைபேசியுடன் பேசிய, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமரான காஸ்டன் பிரவுன் (Gaston Browne), 'நான் இந்திய மக்களுக்கும், உலகுக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருப்பதை எங்கள் நாடும், மக்களும் சிறிதும் விரும்பவில்லை. நாங்கள் மெகுல் சோக்ஸி இங்கிருந்து விரைவில் வெளியேற வேண்டும், எங்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்றே விருப்புகின்றோம் " என்றார். இதை அடுத்து அவர் விரைவில் இந்திய்யாவிற்கு விசாரனைக்காக நாடு திருப்பி அனுப்பப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு,வாழ்க்கை முறை, சுகாதாரம், சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR