Third World War : ஜோர்டானில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் பெரும் அரசியல் போர் வெடித்துள்ளது. ஜோ பிடன் மீது பழியை சுமத்திய டொனால்ட் டிரம்ப், மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் நாட்டை வழிநடத்துவதாக குற்றம் சாட்டுகிறார். உள்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தோல்விகளுடன் போராடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். மேலும், அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்கவைக்க உலகப் போரை நோக்கி நாட்டை அவர் திருப்பலாம் என்று எதிர்கட்சி குற்றம் சாட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள்


ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் அமெரிக்க தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.  அமெரிக்கத் தளத்தின் மீது நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்தனர். தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு போராளிக் குழுக்கள் தான் என்று அதிபர் ஜோ பிடென் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கர்களின் இறப்பு மற்றும் காயங்களுக்கு பொறுப்பானவர்களை,ஒருபோதும் சும்மா விடமுடியாது என்று அவர் சபதம் செய்துள்ளார்.


அமெரிக்கா மீதான இந்த வெட்கக்கேடான தாக்குதல் ஜோ பிடனின் பலவீனம் மற்றும் சரணடைதலின் மற்றொரு பயங்கரமான மற்றும் சோகமான விளைவு என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட முன்னாள் அதிபர் டிரம்ப், தான் நாட்டின் அதிபராக இருந்திருந்தால் இந்த கொடிய தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.


"இஸ்ரேல் மீதான ஈரானிய ஆதரவுடன் ஹமாஸ் தாக்குதல் நடந்திருக்காது, உக்ரைனில் போர் நடந்திருக்காது, இப்போது உலகம் முழுவதும் அமைதி நிலவும். ஆனால், தற்போது நாம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருக்கிறோம் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.


குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை': ஈரான்  
ஜோர்டான்-சிரியா எல்லையில் உள்ள அமெரிக்க தளம் அருகே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல் மத்திய கிழக்கில் பதட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான், தனது நேரடித் தலையீட்டை மறுத்தாலும், அமெரிக்காவை இப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நோக்கில் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | எலான் மஸ்கின் அழைப்பை நிராகரித்த Mr Beast


ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்த பிறகு மத்திய கிழக்கு  பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழப்பது இதுவே முதல் முறை. தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் "ஆதாரமற்றவை" என்று ஈரான் தொடர்ந்து கூறிவருகிறது.


ஈரான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள், மற்றும் தாக்குதலில் செயலில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக சொன்னாலும், ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஈரானின் பினாமி போராளிகளால் சமீபத்திய மாதங்களில் 160 தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஹெஸ்பொல்லாவால் லெபனானில் இருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் மற்றும் செங்கடலில் உள்ள கப்பல்கள் மீது ஏமனில் இருந்து ஹூதிகளால் ஏவப்பட்ட ஷெல்களும் இதில் அடங்கும்.


இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலையோ தீவிரப்படுத்துவதற்குத் தூண்டுவதாகும் என கூறப்படுகிறது. இந்த பின்னணியில் டொனால்ட் டிரம்பின் மூன்றாம் உலகப் போர் என்ற வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. 


மேலும் படிக்க | அம்பானி என்ன சும்மாவா? எலோன் மஸ்க் உடன் நேரடி போட்டி - விரைவில் செயற்கைகோள் இணைய சேவை..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ