லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் உலக இளவரசி ரிஹானா-வின் பாடல் ஒன்று ஹாவர்ட் பல்கலைக் கழக மாணவர்களின் புரட்சி கருவியாக மாறியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளியின் நிதியுதவியிலிருந்து சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருடிய அதிகாரிகளை எதிர்த்து ஹாவர்ட் பல்கலை மாணவர்கள் போராரட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பாப் பாடகர் ரிஹானா-வின் "B**ch Better Have My Money" எனும் பாடலினை பாடி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


பல்கலை மாணவர்களில் ஒருவர் இந்த நிகழ்வினை படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டினை ரிஹானாவும் தனது பக்கத்தினில் ரீ ட்விட் செய்த்துள்ளார்.




தான் பகிர்கையில், தன் பங்கிற்கு தானும் சிறப்பு தலைப்பு ஒன்றினை இந்த பதிவிற்கு இவர் கொடுத்துள்ளார். இதனால் இந்த வீடியோ பெருமளவு பகிரப்பட்டுள்ளது.


மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட ஊழலில் 6 ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரவிக்கின்றன.