புதுடெல்லி: கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதை கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்... இந்த் ஆபாயப் பேயிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவர் கத்தோலிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டியவர்கள்ஆன்லைனில் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள் என்று தனது வேதனையை போப்பாண்டவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ரோமில் நடந்த மாநாட்டில் பேசிய போப்பாண்டவர் பல அதிர்ச்சியான உண்மைகளை ஒப்புக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய கருத்தரங்குகள் எவ்வாறு தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகில் மூழ்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'நமது அடையாளத்தை மறந்துவிடாமல் இருக்க வேண்டும். பணிவாகவும், தவறான வழிகளில் செல்லாமலும், அகம்பாவம் இல்லாமலும், கிறிஸ்தவராக இருப்பது தொடர்பான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்’ என்று வருங்கால மதகுருக்களிடம் போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.



ஆன்லைன் ஆபாசத்தின் "துணை"க்கு எதிராக, மதகுருக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போப் பிரான்சிஸ், பல கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களும் சட்டவிரோத மற்றும் ஆபாச உள்ளடக்கத்தைப் பார்ப்பதை ஒப்புக்கொண்டார்.


மேலும் படிக்க | இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரும் போப் பிரான்சிஸ்


நேற்று (அக்டோபர் 26) ரோமில் நடந்த மாநாட்டில், இன்றைய கிறிஸ்துவர்கள் எவ்வாறு தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகில் மூழ்கியிருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த போப்பாண்டவர், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் ஆபாச உள்ளடக்க பயன்பாடு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.


"சமூக ஊடகம் என்பது பலரின் கைகளில் இருக்கும் ஒரு தீமை. பாமரர்கள், சாதாரணப் பெண்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் என பலதரப்பட்டவர்களிடமும், ஆபாசம் என்ற பிசாசு சமூக ஊடகம் மூலமாக நுழைகிறது” என்று போப்ப்பாண்டவர் கூறினார்.


"குழந்தை துஷ்பிரயோகம் போன்ற குற்றவியல் ஆபாசத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, பாலியல் துஷ்பிரயோக வழக்குகளைப் பற்றியும் சொல்கிறேன். சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். சிற்றின்ப ஆபாசத்திற்காக பயன்படுத்தக்கூடாது" என்று போப் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ரிஷி சுனக் இந்தியரா? ஆஃப்ரிக்கரா? பஞ்சாபியா? பாகிஸ்தானியா?


சக கத்தோலிக்கர்கள் தங்கள் தொலைபேசிகளிலிருந்து ஆபாசப் படங்களை நீக்கி, "கையில் உள்ள பேய்களை" எதிர்க்குமாறு போப்பாண்டவர் வலியுறுத்தினார். "அன்புள்ள சகோதரர்களே, இதில் கவனம் செலுத்துங்கள்," என்று கேட்டுக் கொண்ட போப்பாண்டவர், "ஆபாசம் ஆன்மாவை பலவீனப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.


85 வயதான போப், சமூக ஊடகங்களில் 64.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கிறார். "மிகவும் தாமதமாக வந்ததால்" ட்விட்டரை அதிக அளவில் பயன்படுத்துவது இல்லை என்று போப்பாண்டவர் கூறினார். போப்பாண்டவரின் பெயரில் இயங்கும் பல்வேறு சமூக ஊடக கணக்குகளை, அவரது மக்கள் குழு நிர்வகிக்கிறது.


2020 இன் பிற்பகுதியில், போப் பிரான்சிஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து, பிரேசிலிய மாடல் நடாலியா கரிபோட்டோவின் புகைப்படத்திற்கு லைக் போடப்பட்டது. இதையடுத்து, வத்திக்கான் தனது கோபத்தை வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து அது சமூக ஊடக நிறுவனத்திடம் இருந்து விளக்கங்களைக் கோரியது.


மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?


மேலும் படிக்க | குளிர்காலத்தில் கோவிட் அதிகரிக்கும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ