நியூடெல்லி. உலகின் மிகப்பெரிய ஆபாச இணையதளமான Pornhub இன் தலைமை செயல் அதிகாரி (CEO) Ferrous Anton மற்றும் அந்த இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரி (COO) ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களே தங்கள் விருப்பப்படி ராஜினாமா செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி மிகவும ஆச்சரியமானதாக இருக்கிறது. இந்த பதவி விலகலுக்கு பின் இருக்கும் காரணம் என்ன?


ராஜினாமா ஏன்?


வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு போர்ட்டலான Pornhub இன் தாய் நிறுவனம் MindGeek இன் CEO ஃபெரஸ் அன்டன் மற்றும் COO டேவிட் டாசில்லோ ஆகியோர் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் உள்ள காரணம்  என்ன என்று கேள்விகள் எழுந்துள்ளன.


நியூ யார்க்கர் நிறுவனம் குறித்த செய்தியை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இணையதளத்தின் CEO மற்றும் COO ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர் என்று வெரைட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு


நியூ யார்க்கர் நிறுவனம் குறித்த 8,000 வார்த்தைகள் கொண்ட செய்தியே இந்த பதவி விலகல்களுக்கு பின்னணியாக இருக்கிறது.


போர்ன்ஹப் தனது இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்களையும், குழந்தைகளின் அனுமதியின்றி படமெடுக்கப்பட்ட பாலியல் வீடியோக்களையும் (porn videos\ porn videos) வற்புறுத்தி வெளியிட்டதாக அறிக்கை கூறுகிறது.


நிறுவனத்தின் கருத்து  


ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய அன்டூன் மற்றும் டாசில்லோ (Antoon and Tasillo) நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக போர்ன்ஹப்பைச் சேர்ந்த ஒரு நிறுவன அதிகாரி வலைத்தளத்தில் தெரிவித்தார்.


போர்ன்ஹப் நிறுவனம் எதிர்கால திட்டங்களில் மூலோபாயமாக செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய CEO மற்றும் COOக்கான தேடல் நடந்து வருகிறது. தற்போது, ​​தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிஓஓ பணியை குழு உறுப்பினர்கள் கையாளுகின்றனர்.


மேலும் படிக்க | ஆபாச படம் பார்ப்பதற்கு சம்பளத்துடன் வேலை!


MindGeek இன் அறிக்கை
 
Pornhub இன் தாய் நிறுவனமான MindGeek இந்த முழு விஷயம் குறித்து கூறியது இதுதான்: போர்ன்ஹப் இணையதளத்தில் நிறுவனம் பதிவேற்றும் ஒவ்வொரு வீடியோவும் முழுமையாக வழிகாட்டு விதிமுறைகளின்படி விசாரிக்கப்படுகிறது.


வெளியாகும் வீடியோவில் யாரும் மைனர் இல்லை என்று முடிவு செய்யப்பட்டவை தான் வெளியிடப்படுகிறது. வீடியோவில் காட்டப்பட்டுள்ள நபரிடமிருந்து அவரது சம்மதமும் பெறப்படுகிறது.


இருப்பினும், தி நியூ யார்க்கர் வெளியிட்டுள்ள செய்தி இதற்கு முரணாக இருக்கிறது. போர்ன் ஹப் வலைதளத்தில் வெளியான பல பெண்களை நேர்காணல் செய்தபோது, அவர்களின் வீடியோக்கள் அனுமதி பெறாமலேயே தங்கள் வீடியோக்கள் வெளியானதாக தெரிவித்திருந்தார்கள்.


மேலும் படிக்க | காதலிப்பது போல் நடித்து பெண்களை ஆபாச படம் எடுத்து மோசடி - இளைஞர் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR