Latest updates on Pakistan-Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். இதுமட்டுமின்றி, இந்த நிலநடுக்கம் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு நாடுகளின் பல பகுதிகளில் நிலநடுக்கத்தால் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகரம் புதுடெல்லி வரை உணரப்பட்டது.  பூகம்பத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் ஜுர்மில் இருந்து தென்கிழக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில், பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகே ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) நேற்று இரவு (செவ்வாயன்று) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்கள் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன.  இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பல நகரங்களிலும் உணரப்பட்டது. வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாக பாகிஸ்தானின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். அவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டனர் என்று ஃபைசி கூறினார்.


மேலும் படிக்க | எலோன் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! 200 ஊழியர்களை தட்டித்தூக்கிய டிவிட்டர்! வேலை காலி


பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் குறித்த சமீபத்திய தகவல்கள் இங்கே:


- இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டிருந்தது.


- இது தஜிகிஸ்தானின் எல்லைப் பகுதியிலும் உணரப்பட்டது மற்றும் சில மலைப்பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 


- இஸ்லாமாபாத்தில் சில அடுக்குமாடி கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


- பொது சுகாதார அமைச்சின் தலிபானின் நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் அமர் கூறுகையில், குறைந்தது இரண்டு பேர் இறந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.


- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், "துரதிர்ஷ்டவசமாக, அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அவர் கூறினார்.


- 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பகுதியில் உள்ள ஜுர்மிலிருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.


- நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் எந்தச் சூழலையும் கையாள்வதில் கவனமாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


- அனைத்து சுகாதார மையங்களும் தயார் நிலையில் இருப்பதாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ட்வீட் செய்துள்ளார்.


- நிலநடுக்கத்தால் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு


- வடமேற்கு பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கூரைகள் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்ததாக ஃபைசி மற்றும் பிற அதிகாரிகள் தெரிவித்தனர்.


- காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் மிகவும் வலுவாகவும், பயங்கரமாகவும் இருந்தது.


- பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், பெஷாவர், ஜீலம், ஷேகுபுரா, ஸ்வாட், நவ்ஷேரா, முல்தான், ஸ்வாட், ஷாங்கலா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 


- இந்தியா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.


மேலும் படிக்க | SADDEST CITY: ரத்தமாய் ஓடும் ஆறு! மனிதர்களின் ஆயுளையும் குறைக்கும் விசித்திரமான கிராமம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ