இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தோனேசிய அதிகாரிகள் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டதாக மதிப்பிட்டுள்ளனர். நில நடுக்கம் புளோரஸ் கடலில் (Flores Sea) கிழக்கு நுசா தெங்கரா (East Nusa Tenggara)பகுதியைத் தாக்கியது.


ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவானதாகவும் நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.


ALSO READ | பகீர் சம்பவம்! ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி!


இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளில் "அபாயகரமான" சுனாமி அலைகள் தாக்கும் சாத்தியம் உள்ளது என்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


இது கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று குறிப்பிட்ட, USGS "இந்தப் பகுதியில் சமீபத்திய நிலநடுக்கங்கள் சுனாமிகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இரண்டாம் நிலை ஆபத்துக்களை ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டது.


இந்தோனேசியா பசிபிக் "Ring of Fire" மீது அமைத்துள்ளதன காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகிறது.  இது தீவிர நில அதிர்வு நடவடிக்கைகளின் வளைவு ஆகும். ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் நீண்டுள்ள பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஆகியவை ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


2004  அம் ஆண்டு சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேரழிவ்வு ஏற்பட்டது.  இந்தோனேசியாவில் 170,000 பேர் உட்பட அப்பகுதி முழுவதும் 220,000 பேர் இந்த சுனாமியினால் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக இது இன்னும் பரவலாகக் கருதப்படுகிறது.


2018 ஆம் ஆண்டில், லோம்போக் தீவில் மற்றொரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் பல நடுக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து ஹாலிடே தீவு மற்றும் அண்டை நாடான சும்பாவாவில் 550 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.அதே ஆண்டில், 7.5-ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் மற்றும் சுலாவேசி தீவில் உள்ள பாலுவில் ஏற்பட்ட சுனாமியால் 4,300 க்கும் அதிகமானோர் இறந்தனர் அல்லது காணவில்லை.


ALSO READ | Omicron அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR