புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகள் 23 மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளன. புதிய கொரோனா வகை வைரஸான ஒமிக்ரான் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், இந்தத் தடை 2022 ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தியா தனது திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை ஜனவரி 31, 2022 வரை நிறுத்துகிறது என்ற தகவலை விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ (DGCA) வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மாறுபாட்டான ஓமிக்ரான் குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில், டிசம்பர் 15 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க வேண்டாம் (Travel Ban) என்று டிஜிசிஏ டிசம்பர் 1 அன்று முடிவு செய்தது. ஒரு வாரத்திற்கு முன்னர் தான், திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொரோனாவின் மூன்றாவது அலையில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
சரக்கு விமானத்திற்கு இந்தத் தடை பொருந்தாது
"சர்வதேச பயணிகள் விமானங்களின் இடைநிறுத்தத்தை ஜனவரி 31, 2022 அன்று இரவு 11:59 மணி வரை இந்தியாவிற்கும் வெளியேயும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று DGCA வியாழனன்று DGCA அறிவித்தது.
ஆனால், டிஜிசிஏவால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. "தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதிவாய்ந்த அதிகாரியால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படலாம்" என்று DGCA தெரிவித்துள்லது. மற்றொரு ட்வீட்டில், தற்போதுள்ள பயோபபிள் ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து சர்வதேச விமானங்களும் ஜனவரி 31 வரை தொடர்ந்து செயல்படும் என்றும் விமான ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தியது.
32 நாடுகளுடன் காற்று குமிழி ஒப்பந்தம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் சேவைகள் 23 மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மே 2020 முதல் வந்தே பாரத் மிஷன் மற்றும் ஜூலை 2020 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் இருதரப்பு “Transport Bubbles” அல்லது “Air Travel Arrangements” என்ற விமானப் பயண ஏற்பாட்டின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூட்டான் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 32 நாடுகளுடன் இந்தியா இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான “Transport Bubbles” ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச விமானங்களை அவற்றின் பிராந்தியங்களுக்கு இடையே விமான நிறுவனங்கள் இயக்கும். டிசம்பர் 15 முதல் இந்தியா திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று டிஜிசிஏ முன்னதாக நவம்பர் 26 அன்று அறிவித்திருந்தது. தற்போது ஒமிக்ரானின் அதிகரிப்பால் நிலைமை மாறிவிட்டது.
READ ALSO | இந்தியாவில் 23 பேருக்கு Omicron தொற்று! அதிகரிக்கும் அச்சம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR