தாய்லாந்தில் தன்னுடைய மலக் கழிவுகளை தொண்டர்களை உண்ண வைக்கும் மதபோதகர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாய்லாந்தின் சாயாஃபம் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டின் நடுவில் 74 வயதான தாவீ நன்லான் என்பவர் வசித்து வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் தான் தந்தை என அழைத்துக் கொள்ளும் அவருக்கும் குறிப்பிட்ட சில பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர். அவரை பின்தொடர்பவர்கள் அனைவரும் மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிட வேண்டும். கேட்பதற்கே கொடுமையாக இருக்கும் இந்த விநோத பழக்கத்தையும் பின்பற்றுவதற்கு சிலர் தயாராக இருந்துள்ளனர்.  வனப்பகுதிக்கு நடுவே இருக்கும்  தாவீ நன்லான் ஆசிரமத்துக்கு சென்று இந்த கொடூரமான நடைமுறையையும் அவர்கள் பின்பற்றியுள்ளனர். 



பெண் ஒருவர் அந்த மதபோதகர் வசம் உள்ள தன் தாயை மீட்டுத் தருமாறு புகார் அளித்திருந்தார். அவருடைய புகாரின் மேல் நடவடிக்கை தொடங்கிய காவல்துறைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வனப்பகுதிக்கு நடுவே இருக்கும் ஆசிரமத்துக்கு சென்று பார்த்தபோது, 11 சவப்பெட்டிகளில் பிணங்கள் இருந்துள்ளன. அதில் ஒரு குழந்தையின் சவப்பெட்டியும் இருந்துள்ளது.


மேலும் படிக்க | ஒருவேளை நான் மரணமடைந்தால்...சர்ச்சையை எழுப்பிய எலன் மஸ்க்


இறந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து அவரிடம் கொடுத்துவிட்டால், அவர்களின் ஆவியை சொர்கத்துக்கு அனுப்புவாராம். அவரின் போதனைகளை முழுமையாக நம்புபவர்கள், இதை கடைபிடித்தும் வந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், கோவிட் நடைமுறைகள் எதுவும் அங்கு பின்பற்றப்படுவதில்லை. மதபோதகரின் சிறுநீர் மற்றும் கழிவுகளை சாப்பிடுபவர்களுக்கு கொரோனாவும் வராதாம். இந்த விநோத பழக்கத்தையும் அவர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். ஆண்களுக்கும், பெண்களுக்கு பிரத்தேயகமான சீருடையும் அங்கு வழங்கப்பட்டுள்ளது.



இது குறித்து அந்த மதபோதகரிடம் கேட்டபோது, யாரையும் கட்டாயப்படுத்தி அங்கு இருக்க வைக்கவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே தன்னிடம் இருப்பதாகவும், கழிவுகளை உண்ணுமாறு வற்புறுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தாய்லாந்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணையையும் தொடங்கியுள்ளனர். 


மேலும் படிக்க | ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR