அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 4 காங்கிரஸ் பெண் பிரதிநிதிகளை அவர்களது நாட்டுக்கே திரும்ப சென்று அங்குள்ள குற்றங்களை சரிசெய்துவிட்டு பின் இங்கு வந்து பேசுங்கள் என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரம்ப் குறிப்பிட்ட பெண்களில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெலோசியையும் சேர்த்துள்ளார். முன்னதாக பொலோசி , டி-காலிஃப் ஆகியோர் ட்ரம்ப்பின் ட்விட்டை நாட்டை பிரிக்கும் செயல் , பிரிவினை வாதத்தை தூண்டுகிறார் ட்ரம்ப் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து இந்த பிரதிநிதிகள் மீது தனது எதிர்ப்பை ட்ரம்ப் பதிவு செய்து வருகிறார். பெலோசி, அயன்னா, ரஷிதா, அலெக்ஸான்டரியா ஆகியோர் ட்ரம்புக்கு எதிராக தங்களது எதிர்பை தொடர்ந்து பதிவு செய்துவரும் நிலையில், சமீபத்தில் அவர்கள் ட்ரம்பின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கருத்துகளை வெளியிட்டனர். இதனைத்தொட்ர்நுத ட்ரம்ப் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


குடியுரிமை சட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தை சொந்த நாட்டுக்கே அனுப்பும் எண்ணத்தை திணித்து வருகிறார் என பெலோசி, அயன்னா, ரஷிதா, அலெக்ஸான்டரியா ஆகியோர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., ''முற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக காங்கிரஸ் பெண்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் நாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


"2018 தேர்தலில் வென்ற இவர்கள் நால்வரும், அவர்களை அவர்களது சொந்த ஊரில் உள்ள பிரச்சனையை தீர்த்துவிட்டு அமெரிக்கா பற்றி பேசவும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் திரும்ப வந்து அவர்கள் எப்படி தீர்வு சொல்லியுள்ளனர் என்பதை கூற வேண்டும். அங்குதான் உங்கள் உதவி தேவைப்படுகிறது. பெலோசி உடனடியாக தனது பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு தனது கூர்மையான வரிகளால் பதிலளித்துள்ள பெலோசி, "இவரது நோக்கம் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவதல்ல... வெள்ளையர்களுக்கான அமெரிக்காவை உருவாக்குவது" என்றார். வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இன்னொரு பிரதிநிதியான ஒமர் ''நாங்கள் பதவியேற்கும் போது அமெரிக்க குடிமக்கள் என்றுதான் கூறியுள்ளோம் என்பதை ட்ரம்ப் உணர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.