வாஷிங்டன்: 2ம் உலகபோரின் போது ஜப்பானின் நகரமான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. இரண்டு லட்சத்துக்கு மேலான மக்கள் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இது உலகையே உலுக்கி போட்டது. அதனையடுத்து இந்த போரில் ஜப்பான் சரணடைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பிறகு அணுகுண்டுகளை இப்போது வரை யாரும் போரில் பயன்படுத்துவதில்லை. ஆனால் அணுகுண்டு தயாரிப்பில் சில நாடுகள் செயல் படுகின்றன.


இதுவரை அமெரிக்க அதிபர் யாரும் அப்பகுதிக்கு சென்றதில்லை. இப்போது அதிபர் ஒபாமா அப்பகுதிக்கு செல்ல இருப்பதாக அதிபர் மாளிகையில் இருந்து செய்திகள் வந்தன. வரும் மே 27ம் தேதி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் செல்லவுள்ள அதிபர் ஒபாமா குண்டு வெடித்த பகுதிக்கு செல்ல இருக்கிறார். இது வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும் என கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஒருவர் அப்பகுதிக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும்.