மடகாஸ்கரின் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா திங்களன்று (மே 3) ஒரு உள்ளூர் மூலிகை மருந்தை அறிமுகம் செய்துள்ளார். அவரது நம்பிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்த இந்த மருந்து உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிபர் ராஜோலினா திங்களன்று இதுதொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக பத்திரிகைகளுக்கு வழங்கினார், மேலும் இந்த மருந்து இதுவரை இரண்டு கோவிட் -19 வழக்குகளை குணப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மூலிகை தீர்வு ஆர்ட்டெமிசியாவிலிருந்து பெறப்படுகிறது மற்றும் பிற உள்நாட்டு மூலிகைகள் இணைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்கள் படி மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.



'COVID ஆர்கானிக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து மலகாசி இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு ரிசர்ச் உடன் இணைந்து காங்கோ மருத்துவர் டாக்டர் ஜெரோம் முனியாகி உருவாக்கியுள்ளார்.


இதுகுறித்து அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "அனைத்து இலாபங்களும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்காக IMRA-க்கு நன்கொடையாக வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


பள்ளிக்குத் திரும்பும் குழந்தைகளுக்கு மருந்துகள் கட்டாயமாகக் கூறப்படுகின்றன. மீண்டும் திறந்து வரும் ஏழை பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் அரசாங்கம் இலவசமாக பானத்தை விநியோகித்து வருகிறது. மடகாஸ்கரில் தற்போது 128 நேர்மறை கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் வைரஸ் காரணமாக எந்த மரணமும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.


இதனிடையே ஆப்பிரிக்க தேசமும் தற்போது அம்மை நோய் பரவுவதை எதிர்த்துப் போராடி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 1,000 குழந்தைகள் இந்த நோய் தொற்றுக்கு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


திங்களன்று உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்புகள் 248,302 லட்சத்தை எட்டியுள்ளன, அமெரிக்கா 68,000-க்கும் அதிகமான இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,188,122 வழக்குகள் மற்றும் 68,598 இறப்புகள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது, 25,264 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 210,717 வழக்குகள் COVID-19 நோய்த்தொற்றுகளுடன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயினுக்கு பின்னால் இத்தாலி உள்ளது குறிப்பிடத்தக்கது.