உகாண்டாவில், சர்தார் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் மோடி!
உகாண்டாவில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலையினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
கம்பாலா: உகாண்டாவில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலையினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உகாண்டா அதிபர் யவேரி முசவேனி ஆகியோர் இணைந்து, கம்பாலாவில் உள்ள இந்திய சமூக மேம்பாட்டு கூடத்தில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலையினை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி இந்திய சமூக மேம்பாட்டு மையமானது இந்தியாவிற்கும் உகாண்டாவிற்கும் இடையே வலுவான மற்றும் மிக நீடித்த பொருளாதார மற்றும் கலாச்சார இணைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தெரிவித்தார்.
உகாண்டா அதிபர் யவேரி முசவேனி பேசுகையில் இந்திய சமூக மேம்பாட்டு மையத்தின் சேவையினை குறித்தும் செயல்பாடுகளை குறித்தும் பாராட்டி பேசியுள்ளார்.
முன்னதாக உகாண்டா நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி அவர்கள் தெரிவிக்கையில்... "உகாண்டா நாடு ஆப்பிரிக்காவின் முத்து ஆகும். பெரும் வளங்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த நிலமாகும். பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவிற்கும், உகாண்டாவிற்கும் நட்புறவு உண்டு என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அரசால் ஜின்ஜாவின் நைல் நதியில் மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் காந்தி பரம்பரிய மையமும் அமைக்கப்படும். ஆப்பிரிக்காவை பங்குதாரராக வைத்து கொண்டதற்கு இந்தியா பெருமிதம் கொள்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!