இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா-மே தோல்வியடைந்ததை அடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து முறைப்படி இங்கிலாந்து விலகுவதற்கான மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இதற்கான உடன்படிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.இதற்காக 45–55 பில்லியன் ஈரோ (சுமார் ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதல் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வரையில்) தருவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது.


இந்த மசோதா மீது கொண்டுவரப்பட்ட திருத்தத்தில், பிரதமர் தெரசா மே தோல்வி அடைந்தார். அவரின் விருப்பத்துக்கு மாறாகவும், திருத்தத்துக்கு ஆதரவாகவும் ஓட்டுகள் கிடைத்துள்ளன. அவருக்கு ஆதரவாக 309 ஓட்டுகளும், எதிராக 305 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.


தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே அவருக்கு எதிரான நிலைப்பாட்டை சில எம்.பி.க்கள் வாக்களித்ததே அவருடைய தோல்விக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.