மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலம் , வெஸ்மின்ஸ்டர் அபேயில் ராணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரிட்டன் மக்கள், அரச குடும்பத்தினர், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராணியின் இறுதி ஊர்வலம் உலகம் முழுவதும் நேரலையில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பட்டு வருகிறது. சென்ட்ரல் லண்டன் பகுதியில் ட்ரோன் பறப்பதற்கு தடை தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம், விமானங்களின் சத்தம் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் விமானங்களை இயக்கி வருகிறது. சென்ட்ரல் லண்டனில் 22 மைல்களுக்கு தடுப்புகள் போடப்பட்டு பொதுமக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த நாளில் குடும்பத்திற்கு என பிரத்யேக 
உடை அணியவும் விதிகள் உள்ளன.


மேலும் படிக்க | பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்


மகாராணியின் மூத்த மகனும், புதிய மன்னருமான சார்லஸ் பதக்கங்களுடன் கூடிய சீருடையை இறுதி சடங்கு நடைபெறும் இன்றைய நாள் முழுவதும் அணிந்திருப்பார்.  கடந்த 2012ஆம், மகாராணி அவருக்கு வழங்கிய சிவப்பு வெல்வெட் மற்றும் தங்க பீல்ட் மார்ஷல் ஏந்துகோளையும் கையில் எடுத்துச்செல்கிறார். ராணி எலிசபெத்தின் அனைத்து பிள்ளைகளும் (இளவரசர் ஆண்ட்ரூ தவிர), இன்று முழுவதும் கறுப்பு ராணுவ உடைகளையே அணிந்து இருக்க வேண்டும். மகாராணியின் பேரனும், இளவரசருமான வில்லியமும் ராணுவ உடையை அணிந்துள்ளார். 


ஆனால், இளவரசர் ஹாரி, மகாரணியின் மகனான இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர் மட்டும் ராணுவ உடை அல்லாமல், கறுப்பு நிறத்திலான உடையை மட்டுமே அணிந்துள்ளார். ஏனென்றால், ஆண்ட்ரூ மற்றும் ஹாரி ஆகியோர் ஏற்கெனவே அரசு குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு சாதராண உடையில் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனர். மேலும், அவர்களுக்கு ராணுவ உடை அளிக்கப்பட்டபோதும், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தலைவர்கள் உள்பட பலரும் கருப்பு நிற உடை அணிந்து தங்களின் அஞ்சலியை செலுத்துகின்றனர். 


மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த செப். 8ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, அவரது மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பு ஏற்றார். ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் 10 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க |  ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை! பின்னணி இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ