இங்கிலாந்து இளவரசர் பீட்டர் ஹேரி மற்றும் மேகன் மார்க்ல் தம்பதிக்கு வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு லிலிபெட் 'லில்லி' டயானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிலந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகர் மேகன் மார்க்லே திருமணம் விண்ட்சர் கோட்டையில் 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. அவர்களின் மகன் ஆர்ச்சி ஒரு வருடம் கழித்து பிறந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேகனுக்கு முதல் குழந்தை பிறந்தபோது அவர்கள் அரசக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். தற்போது ஹாரி தம்பதியினர் அரசப் பதவியை விட்டு விலகி, தனித்து வாழ்ந்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், மேகனும் ஹாரியும் தாங்கள் அரச கடமைகளை துறந்து வட அமெரிக்காவுக்குச் செல்வதாக அறிவித்தனர். 


இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கு மேகன் வெள்ளிக்கிழமை ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்ததாகவும், லிலிபெட் “லில்லி” டயானா மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என்று பெயர் சூட்டியிருப்பதாகவும், அவர்களது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


Also Read | ஹாரி & மேகன் மார்கெல் திருமணம் முதல் Megxit வரை


குழந்தை 7 பவுண்ட், 11 அவுன்ஸ் எடை இருப்பதாகவும் தெரிவித்தார். குழந்தையின் புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. குழந்தையின் முதல் பெயர், லிலிபெட், இங்கிலாந்து மகாராணி எலிசெபெத்தின் புனைப்பெயர். டயானா என்பது ஹாரியின் தாய் டயானாவை நினைவு படுத்துவதாகவும், உள்ளது. குழந்தை பிரிட்டன் சிம்மாசனத்திற்கு உரிமையுள்ள பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.  


மார்ச் மாதத்தில் ஓப்ரா வின்ஃப்ரேயுடன் ஹாரி மற்றும் மேகனின் பரபரப்பான தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பிறகு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. தங்கள் முதல் குழந்தையின் தோலின் நிறம், அரச குடும்பத்தை விட்டு வெளியேறியது, தற்கொலை பற்றி சிந்திக்க வழிவகுத்த கடுமையான அழுத்தங்கள் என பல திடுக்கிடும் செய்திகளை அந்த நேர்க்காணலில் தெரிவித்திருந்தனர். 


இது இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிம்மாசனத்திற்கு எட்டாவது வாரிசாக, இளவரசி ‘டயானா’ பிறந்திருக்கிறார்.


Also Read | Roger Federer பிரெஞ்சு ஓபன் 2021 இலிருந்து விலகிய காரணம் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR