நியூயார்க்: இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் புகைப்படக்காரர்களால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு தன்னை துரத்தும் புகைப்படக்காரர்களை தவிர்ப்பதற்காக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே காரில் தப்பிச் சென்றனர். இதனால் கடுமையான விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இந்த சம்பவம் 1997ல் இளவரசர் ஹாரியின் தாயார் இளவரசி டயானாவின் கார் விபத்தை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. புகைப்படக் கலைஞர்களைத் தவிர்க்க முயன்ற இளவரசி டயானாவின் கார் பாரிஸில் விபத்துக்குள்ளானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் மேகனும் ஹாரியும் ஒரு விருது நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது டயானாவிற்குன் நடந்தத்த போன்ற சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஹாரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவம் மற்ற சாலைப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. பாதசாரிகளும் இரண்டு நியூயார்க் காவல் துறை அதிகாரிகள் மீதும் வாகனம் மோதும் நிலை ஏற்பட்டது. பின்னர் அரச தம்பதியினர் வாகனத்தில் இருந்து இறங்கினார்கள்” என்றார்.


இந்திய-அமெரிக்க வண்டி ஓட்டுநர் சுக்சரண் சிங்


புகைப்படக்காரர்களை தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் மார்க்கலை, இந்திய-அமெரிக்க வண்டி ஓட்டுநர் சுக்சரண் சிங்கின் காரில் கூட்டிச் செல்லும் படி பாதுகாவலர்கள் கோரினர். சோனி என்று அழைக்கப்படும் சிங், மிட் டவுன் மன்ஹாட்டனில் உள்ள உள்ளூர் போலீஸ் வளாகத்தில் தம்பதியை இறக்கிவிட்டதாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நான் நியூயார்கின் 67வது தெருவில் இருந்தேன், அப்போது பாதுகாவலர் என்னை அழைத்து அரச தமபதிகளை அழைத்து செல்லும் படி கூறினார் என்றார். முன்னதாக, இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேரியும் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று புகைப்படக்காரர்கள் வந்து படம் எடுக்க ஆரம்பித்தார்கள்.


பதட்டமாக இருந்த அரச தம்பதிகள்


செவ்வாய் இரவு, மேகனின் தாயார் டோரியா ராக்லாண்டுடன் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் தம்பதியினர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கிருந்து, வெளியேறிய பிறகு பல புகைப்படக் கலைஞர்கள் அவர்களைப் பின் தொடர்ந்த போது, ​​தம்பதியினர் மன்ஹாட்டன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து புகைப்படக்காரர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். அங்கு சிங் அவர்களை அழைத்து காவல் துறையினர் காரில் உட்கார வைத்தார். அவர்கள் சில நிமிடங்கள் தான் சிங்கின் காரில் இருந்தனர் என்று சிங் கூறினார். அரச தம்பதிகள் தங்கள் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில், புகைப்படக் காரர்கள் துரத்தியதால், காவல் துறையிடம் தஞ்சம் புக முடிவு செய்தனர். தம்பதிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர் எனக் கூறிய ஓட்டுநர் சிங் அவர்களை நாள் முழுவதும் யாரோ பின்தொடர்ந்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார். 


வண்டி ஓட்டுநரின் அனுபவம்


வண்டி ஓட்டுநர் சிங், அரச தமபதிகளின் பயத்தை நீக்கும் வகையில், நியூயார்க் நகரம் பாதுகாப்பான இடம், ஒவ்வொரு மூலையிலும் போலீஸ் நிலையம் உள்ளது, போலீஸ் உள்ளது, நியூயார்க்கில் பயப்பட ஒன்றுமில்லை. மேலும், புகைப்படக்காரர்கள், ஆர்வமாக இருந்ததை போல் தான் தெரிந்தது, ஆக்கிரோஷமாக இருக்கவில்லை என்றும் அவர் கூறினார். அவர்கள் எங்களுக்குப் பின்னால் தொடர்ந்து கொண்டு இருந்தார்கள். அதற்கு மேல் எதுவும் இல்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் தூரம் இருந்தது என்றார்.


மேலும் படிக்க | ராணுவ செயற்கைக்கோள் வசதியை ஆய்வு செய்த ‘மரியாதைக்குரிய அப்பா’ கிம் ஜாங் உன்


எனினும், ஒரு அறிக்கையில், ஹாரி மற்றும் மேகனின் செய்தித் தொடர்பாளர், அவர்கள் பின்தொடர்வதை கிட்டத்தட்ட பேரழிவு தரும் வகையில் அனுபவித்ததாகக் கூறினார். பல புகைப்படக் கலைஞர்கள் தங்கள் பயணத்தை சவாலானதாக மாற்றியதாகவும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. ஹாரி மற்றும் மேகன் நல்ல மனிதர்கள் என சிங் விவரித்தார். பயணத்தின் முடிவில், 'ஓ, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று கூறி, அரச தம்பதிகள் நன்றி தெரிவித்தனர். அவர்கள் காரில் இருந்து இறங்கியவுடன் அவரது பாதுகாவலர் பணம் கொடுத்தார். இது அளவிற்கு அதிகமான தொகையாக இருந்தது என்று சிங் கூறினார். பத்து நிமிட பயணத்திற்கு, $50 கொடுக்கும் போது, இன்னும் என்ன கேட்க முடியும் என சிங் மேலும் கூறினார்.


இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த 6 ஆம் தேதி முறைப்படி முடி சூடிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மும்பை தாக்குதலில் ஹெட்லிக்கு உதவிய ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஒப்புதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ