கால் சென்டர் பணிகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மசோதாவை ஆளும் குடியரசுக் கட்சியும் மற்றும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் இணைந்தே கொண்டு வந்துள்ளன.அமெரிக்கா கால் சென்டர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு கால் சென்டர் நிறுவனங்களை நகர்த்துவதற்கு இந்த மசோதா மூலம் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல் வெளிநாடுகளுக்கு பணிகளை கொண்டு செல்லும்பட்சத்தில், அந்த நிறுவனங்களுக்கு அரசு சார்பில் கடன் வழங்கப்படமாட்டாது. அந்த மாதிரியான நிறுவனங்கள் அமெரிக்க அரசின் கடன்களைப் பெறுவதற்கான தகுதியை இழக்கின்றன.


இதுகுறித்து அமெரிக்க கூறுகையில்:- தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மசோதா மூலம் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கால் சென்டர் பணிகள் இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்பட மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் உள்பட நாடு முழுவதும் பணியாற்றி வரும் கால் சென்டர் பணியாளர்களை காப்பாற்ற ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கொண்டு வந்த இந்த மசோதா காப்பாற்றும்'' என்றனர்.


அமெரிக்காவில் இருந்து கால் சென்டர் நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று, அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. இதனால் அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாத நிலைமை ஏற்படுகிறது.