துருக்கியில் கால்கள், வால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாய்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு மாகாணம் துருக்கி பகுதியில் கடந்த 15 ஆம் தேதி சபான்கா என்னும் இடத்தில் கால்கள், வால் வெட்டப்பட்ட நிலையில் நாய்குட்டி ஒன்று வலியில் துடித்துக்கொண்டு இருந்துள்ளது. 


இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த நாய் குட்டியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து, அந்த நாய்குட்டிக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளித்துள்ளனர். அனால், அந்த நாய்குட்டிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 


இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் சமூக வலை தளத்தில் வேகமாக பரவ ஆரமித்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். 


இந்த சம்பவத்தையடுத்து விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.