ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மிகப்பெரிய எதிரியான அலெக்ஸி நவல்னி ஆர்க்டிக் சிறையில் மரணமடைந்தார். அவரது இறப்புக்கு அமெரிக்க அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது இறப்பில் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர். அலெக்ஸி நவல்னி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்ததால் அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேற்குலக நாடுகளாலும் பரவலாகக் கண்டிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 25 வயதில் மாரடைப்பு... கனடாவில் இந்திய மாணவர் மரணம்


இந்த சூழலில் அலெக்ஸி நவல்னியின் கடைசி வாரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் இறப்பதற்கு முன் தனது கடைசி வாரங்களை ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள பேனல் காலனி சிறையில் கழித்திருக்கிறார். அவரது வழக்கறிஞர்கள் மூலம் அனுப்பப்பட்ட செய்திகள் மூலம், அலெக்ஸி நவல்னி உற்சாகமாக இருந்தார். முதலில் மாஸ்கோவிற்கு அருகில் இருந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் அவர். பின்னர் புதிய ஆர்க்டிக் சிறைக் காலனிக்கு மாற்றப்பட்டார். இது மாஸ்கோ சிறையிலிருந்து 2,000 கிலோமீட்டர்கள் தொலைவில் யமல்-நெனெட்ஸின் சைபீரியப் பகுதியில் உள்ள IK-3 சிறைக் காலனி ஆகும். 


கடைசி வீடியோவில் பேசும்போது, " நான் இப்போது ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே வசிக்கிறேன். மாஸ்கோவிற்கு அருகிலுள்ள மத்திய விளாடிமிர் பகுதியில் இருந்து சுமார் 20 நாள் பயணத்திற்கு பிறகு இங்கு வந்துள்ளேன். அதனால் சோர்வாக இருக்கிறேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் இறுதியாக இங்கு வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புடின் என்னை வடக்கில் உள்ள ஒரு அரண்மனையில் அடைத்ததில் மகிழ்ச்சி. அவர் என்னை தனிமைச் சிறையில் அடைக்கும் அவருடைய எண்ணம் முட்டாள்தனமானது." என்று பேசியிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார் அலெக்ஸி நவல்னி. இதில் 300 நாட்களுக்கும் மேலாக தனிமை சிறையில் இருந்துள்ளார். இப்படியான சூழலில் இப்போது மரணமடைந்துள்ளார் அவர். நவல்னியின் இறப்பு ரஷ்யாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | spaceMIRA: பூமியில் இருந்தே விண்வெளியில் இருப்பவர்களுக்கும் அறுவைசிகிச்சை செய்யும் தொழில்நுட்பம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ