25 வயதில் மாரடைப்பு... கனடாவில் இந்திய மாணவர் மரணம்

Bizarre News: கனடாவில் படித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான மாணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 16, 2024, 02:26 PM IST
  • ஒரு வார காலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
  • இன்று திடீரென அவர் உயிரிழந்த தகவல் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
  • உடலை விரைந்து இந்தியா கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை.
25 வயதில் மாரடைப்பு... கனடாவில் இந்திய மாணவர் மரணம் title=

Bizarre News: நவீன காலகட்டத்தில் அனைத்தும் அவசர கதியில்தான் இருக்கின்றன எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் அவசரம் ஒன்றே தாரக மந்திரமாக உள்ளது. சாலையில் பைக், கார்களில் செல்பவர்கள் எல்லாம் அவசர கதியில் வேக வேகமாக செல்கின்றனர். நிதானம் என்பது ஒரு துளிக்கூட இருப்பதில்லை எனலாம். நகரமயமாதலின் முக்கிய கூறாக இது உள்ளது. 

இவைதான் உணவு முறையிலும் எதிரொலிக்கிறது. அவசர கதியில் உணவை சரியாக சாப்பிடாதது ஒரு பிரச்னை என்றால் அவசர அவசரமாக சரியாக மென்று சாப்பிடாததும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. அவசர கதியிலேயே தயாரிக்கப்படும் ஜங்க் புட்ஸ் தற்போதைய இளைய தலைமுறையிடம் அதிகரித்துவிட்டது எனலாம். 

அந்த வகையில், சமீப காலமாக இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் போன்ற ஏற்படுவது வாடிக்கையாகவிட்டது. அதற்காக எல்லா பிரச்னைகளுக்கும் நவீன வாழ்வுதான் காரணம் என சொல்வது பழமைவாதம் என்றாலும் இந்த காரணத்தையும் முழுமையாக புறக்கணிக்க முடியாது. அந்த வகையில் தற்போது 25 வயதான ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவில்லை என்றாலும், இதுபோன்ற மரணங்கள் தற்போது வாடிக்கையாகி வருவதாக மக்கள் தங்களின் அச்சங்களை தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | வேலையே செய்யாம இருந்தாலும், எலோன் மஸ்க் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

அதிர்ச்சியில் குடும்பம்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஷேக் முஸம்மில் அகமது. 25 வயதான இவர் கனடா நாட்டின் ஒன்டாரியோ நகரில் உள்ள கிச்சனர் சிட்டியின் கோனெஸ்டோகா கல்லூரி, வாட்டர்லூ வளாகத்தில் மாணவராக உள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையில் முதுகலை பட்டப்படிப்பை கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அங்கு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஒரு வாரமாக தீவிர காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அவரது குடும்பத்தினருக்கு அகமதின் நண்பர் ஒருவர் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு, அகமது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். இதை கேட்ட அவரின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி இருந்தனர். 

ஷேக் முஸம்மில் அகமது உயிரிழந்த தகவல் குறித்து தெலுங்கானாவை அடிப்படையாக வைத்து இயங்கும் மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் எனும் அரசியல் கட்சியின் தலைவரான அம்ஜத் உல்லா கான் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கிய கிரேக்கம்! ஆர்தடாக்ஸ் நாட்டின் அதிரடி முடிவு!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை

அவர் தனது X பக்கத்தில்,"தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் முஸம்மில் அகமது-25 வயதான ஒருவர், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டியில் உள்ள கோனெஸ்டோகா கல்லூரியில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தகவல் தொழில்நுட்பத்துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்" என பதிவிட்டதன் மூலமே இந்த தகவல் பொதுவெளிக்கு தெரியவந்தது.

தொடர்ந்து அந்த பதிவில் "கடந்த ஒரு வாரமாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் இன்று மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அவரது நண்பரிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு வந்திருக்கிறது.  இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் முழு குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளனர். 

மேலும் அவரது சடலத்தை விரைவாக இந்தியாவின் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு கனடாவின் இந்திய தூதரகத்தையும், இந்திய துணைத் தூதரகத்தையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 
மேலும், அவர் சில தொடர்பு எண்களையும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும், அகமதின் உடலை ஹைதராபாத் கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் படிக்க | உலகின் பெரிய பொருளாதாரம்: சரிந்த ஜப்பான், முன்னேறிய ஜெர்மனி.. அப்போ இந்தியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News