நியூ கலேடோனியா அருகே 7.3 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியிலுள்ள நியூ கலிடோனியா அருகே ஒரு தீவு உள்ளது. அந்த தீவில் சக்தி வாய்ந்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியிலுள்ள நியூ கலிடோனியா அருகே ஒரு தீவு உள்ளது. அந்த தீவில் சக்தி வாய்ந்த்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து நியூ கலிடோனியா மற்றும் அதன் அருகே உள்ள வானுயாடு உள்ளிட்ட தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், தீவிர சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா கடற்கரையை ஒட்டிய பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.43 (ஆஸி., நேரப்படி) மணிக்கு நியூ கலிடோனியா அருகே பலமுறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.