Imran Khan & Bushra Begum: பாகிஸ்தான் தேர்தலுக்கு முன்னதாக இம்ரான் கானுக்கு ஒரே வாரத்தில் மூன்றாவது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி என  இருவருக்கும் தலா 5,00,000 பாகிஸ்தான் பணமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமிய சட்டங்களை மீறி, திருமணம் செய்துக் கொண்டதாக இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது தொடர்ப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்திருக்கும் பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர், சிறையில் இருந்து வெளியே வருவாரா என்ற கேள்விகளும் எழுகின்றன.


வழக்கு விவரங்கள்
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் கவார் ஃபரீத் மேனகா, இந்த வழக்கைத் தொடர்ந்தார். தனது முன்னாள் மனைவி மற்றும் அவரை திருமணம் செய்துக் கொண்ட இம்ரான் கான் இருவரும் “இஸ்லாமுக்கு எதிரான மற்றும் சட்டவிரோதமான” திருமணம் செய்துக் கொண்டதாக வழக்கு தொடுத்திருந்தார்.  


புஷ்ரா பீபியின் இத்தாத் காலத்தில் நடந்த அவர்களது திருமணம் தொடர்பான வழக்கு, அடியாலா மாவட்ட சிறையில் அமைந்துள்ள தற்காலிக நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மூத்த சிவில் நீதிபதி குத்ரதுல்லா இந்த தீர்ப்பை அறிவித்தார்.


இதற்கு முன்னதாக, ஒரே வாரத்தில் இம்ரான் கானுக்கு ஒரு வழக்கில் 14 ஆண்டுகளும், சைபர் வழக்கில் 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது. பாகிஸ்தான் தேர்தலுக்கு முந்தைய இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.


மேலும்படிக்க | இலங்கை அரசின் புதிய ஆயுதம்! இணையதளத்திற்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!


வழக்கு விசாரணையின்போது, நான்கு சாட்சிகள் சமர்ப்பித்த வாக்குமூலங்களின் குறுக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு கான் மற்றும் புஷ்ராவின் வாக்குமூலங்கள் பிரிவு 342 இன் கீழ் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 


தனது முன்னாள் மனைவி புஷ்ரா பீபி தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு, அவர் இத்தாத் கட்டத்தில் இருந்தபோது அவர் இம்ரான் கானைத் திருமணம் செய்துக் கொண்டதாகவும், அது இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிரானது என்று புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் கவார் ஃபரீத் மேனகா வாதிட்டார். 


இத்தாத் என்றால் என்ன?


இத்தாத் என்பது ஒரு பெண் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அல்லது விவாகரத்துக்குப் பிறகு கடைபிடிக்க வேண்டிய காலகட்டமாகும், அந்த நேரத்தில், ஒரு பெண் வேறொரு ஆணை திருமணம் செய்யக்கூடாது.


இத்தாத்தின் முக்கிய நோக்கம் என்ன?
இத்தாத்தின் நோக்கம் என்பது, திருமண பந்தத்தில் இருந்து விலகும் பெண், கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை தெரிந்துக் கொள்வதற்காகவும், அந்தப் பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையின் தந்தை யார் என்பதை முடிவு செய்வதற்கான இஸ்லாமிய நடைமுரை ஆகும். விவாகரத்து முடிந்த பிறகு, பிரிந்த கணவனும் மனைவியும் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பையும் இத்தாத் அளிக்கிறது,


கணவன் இறந்துவிட்ட நிலையில், அவரது மனைவி, கணவனின் மரணத்திற்கு துக்கம் தெரிவிப்பதற்கான காலகட்டம் இது. இந்த காலத்தில் ஒரு பெண், திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது. 


மேலும் படிக்க | Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ