அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ஈரான் நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவிற்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. சிரியா, ஏமன் நாடுகளில் நடக்கும் போர்களில் இரு நாடுகளும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.


இந்நிலையில் தனது அண்டை நாடுகளுடன் பணியாற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஹார்மோசான் மாகாணத்தில் ஈரான் அதிபர்  ஹசன் ரவ்ஹானி தெரிவிக்கையில் ''மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுத்துவதற்கு ஈரான் அதன் அண்டை நாடுகளோடு பணியாற்றத் தயாராக உள்ளது.


நாங்கள் இந்த பிராந்தியத்தில் சகோதரத்துவமான உறவையே விரும்புகிறோம்.  அமெரிக்காவும், இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நினைக்க வேண்டாம், அது தவறு. முஸ்லிமாகிய நாம்தான் இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும்'' என தெரவித்துள்ளார்.


அமெரிக்கவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக ட்ரம்ப் விமர்சித்தார். இதனையடுத்து அமெரிக்கா ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியது.


ஆனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.