மாஸ்கோவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: -7 டிகிரி; ஒருவர் பலி
வரலாறு காணாத பனிப்பொழிவால் மாஸ்கோவில் இயல்வு வாழ்க்கை பாதிப்பு.
மாஸ்கோவில் இதுவரை இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் மாஸ்கோ பிராந்தியத்தில் உயர்ந்த காற்றுடன் கூடிய பனிமழை ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் ஒரு நபர் பலியாகியுள்ளார். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான பனிபொழிவு காரணாமாக காற்றின் வெப்பநிலையை மிகவும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வெப்பநிலை -12 டிகிரி செல்சியஸ்க்கும் கீழே குறைந்துவிட்டது. நாளை வெப்பநிலை சுமார் -8 டிகிரி செல்சியஸ்க்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலைப்போல் பனி குவிந்திருப்பதால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். பனிப்பொழிவு காரணமாக மாஸ்கோவில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவால் கிட்டத்தட்ட 3,000-க்கும் அதிகமான குடும்பங்கள் நீண்டகால மின்சாரம் வெட்டுக்களுக்கு ஆளாகியுள்ளன.
மாஸ்கோவின் மூன்று விமானநிலையங்களான ஷெரெமிட்டீவோ, டோமொடொடோவோ மற்றும் வுனோவோவோ ஆகிய இடங்களில் 217 விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டன. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன
மாஸ்கோ பிராந்தியத்தில் அவசரகால நிலைமையை அறிவித்த்துள்ளது அரசு. பனிப்பொழிவு காரணாமாக இதுவரை 43 சென்டிமீட்டர் அளவுக்கு பனி தேங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.