ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் பின்னால் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷின்சோ அபேவை சுட்ட நபரின் பெயர் டெட்சுயா யாகாமி என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபே மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.   


முதலில் 2006-ம் ஆண்டு ஜப்பான் பிரதமராகப் பதவியேற்ற ஷின்சோ அபே, ஓராண்டிலேயே பதவி விலகினார். பின்னர் 2012-ம் ஆண்டு மீண்டும் ஜப்பான் பிரதமாராகப் பதவி ஏற்றார். 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த அவர் பின்னர் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவி விலகினார். ஜப்பானின் நீண்ட காலப் பிரதமரான அபேவுக்கும், இந்தியாவுக்குமான உறவு மிக நெருக்கமானதாகவே இருந்தது. 


மேலும் படிக்க | Shinzo Abe Death News: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2014-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஷின்சோ அபே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.



2015 ஆம் ஆண்டில், கங்கா ஆரத்தியைக் காண பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு ஷின்சோ அபே வருகை தந்தார்.  



இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த அபே, அகமாதாபாத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.



பின்னர் ஒரு வருடம் கழித்து, 2018-ம் ஆண்டு இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருந்த ​​பிரதமர் மோடிக்கு அபே அவரது இல்லத்தில் விருந்தளித்தார்.


2021-ம் ஆண்டு ஷின்சோ அபேவுக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.



அபேவின் தாய்வழி தாத்தாவுக்கும், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனை ஷின்சோ அபேவே நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் உரையாற்றிய அபே, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1957-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமரான தனது தாத்தா நோபுசுகே கிஷிக்கு டெல்லியில் விருந்தளித்ததை நினைவு கூர்ந்தார்.


ஷின்சோ அபேவின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் ஜப்பான் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. உலகிலேயே மிகக் கடுமையான துப்பாக்கிச் சட்டம் அமலில் உள்ள ஜப்பானில் முன்னாள் பிரதமர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR