இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 76வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்பு செய்தியினை அவரின் குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவரின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-


‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர் பெரிய விஞ்ஞானி ;அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர். 


இந்நிலையில், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.