பகவத் கீதையும் ரிஷி சுனக்கும்... தீபாவளியில் இங்கிலாந்து பிரதமராக தேர்வு
Rishi Sunak`s Hinduism connect: இங்கிலாந்தில் பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்து மதத்தை பின்பற்றுபவர். அதுவும் தீபாவளி அன்று பதவியேற்றது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Rishi Sunak's Hinduism connect: இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்தின் பிரதமராகத் தயார் என்று ரிஷி சுனக் அறிவித்திருந்தார். தன்னை முறைப்படி பிரதமர் வேட்பாளராக அறிவித்த அவர்ர், 'பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும்' என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக், தீபாவளியன்று தேர்வாகியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, இந்து முறைப்படி வாழ்ந்துவரும் ரிஷி சுனக், தீபாவளி அன்று பிரதமராக தேர்வாகியுள்ளார் என்பது அவருக்கு சிறப்பான ஒரு தருணம் என கூறப்படுகிறது.
அதாவது, கிறுஸ்துவத்தை பாதுகாக்கும் ஒரு பெரிய நாட்டில், இந்து மதத்தை பின்பற்றும் முதல் பிரதமர், ரிஷி சுனக் ஆவார். முன்னதாக, அவர் 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்றுக்கொள்ளும்போதே, கையில் பகவத் கீதை உடன் பதவி பிராமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | 45 நாள்களில் பதவி காலி... லிஸ் ட்ரஸ் ராஜினாமா - இங்கிலாந்தின் அடுத்த பிரமதர் யார்?
வேரை விட்டுவிடாதவர்
அதுமட்டுமின்றி, இங்கிலாந்தின் முதல் பிரதமாரான சர் ஹோரேஸ் வால்போலின் அலுவலகம் இருந்த டவுனிங் வீதி (Downing Street) பகுதியில்தான் அரசின் உயர் பதவியில் இருப்போரின் குடியிருப்புகள் உள்ளன. அப்படி, டவுனிங் வீதி 11ஆம் எண் குடியிருப்பில் வசித்து வந்தவர்களில், முதல் முறையாக தீபாவளியை கொண்டாடியவரும் ரிஷி சுனக் தான்.
அவர் தனது குடியிருப்பின் வாசலில் தீபாவளியை கொண்டாடிய தருணத்தை குறித்து பேசும்போது,"டவுனிங் வீதியில் தீபாவளியை கொண்டாடியது என்பது எனது பெருமைமிகு நிகழ்வுகளில் ஒன்று. அந்த இரண்டு ஆண்டுகளில் அந்த பதவியை வகித்துக்கொண்டிருந்தபோது, நிகழ்ந்த பெருமையான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று" என்றார்.
அவர் இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும், ஆக்ஸ்போர்டு, ஸ்டான்போர்டு போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயின்றிருந்தாலும், எப்போதும் அவரது கலாச்சார வேர்களை விட்டு அவர் விலகவேயில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, மாட்டுக்கறி உண்ணாதது, அவரது பணி மேசையில் விநாயகர் சிலைகளை வைத்துக்கொள்வது போன்றவை அதற்கு உதாரணங்களாக அமைகின்றது.
மேலும் படிக்க | இங்கிலாந்தின் பிரதமராகிறார் ரிஷி சுனக்! இங்கிலாந்தை ஆளப்போகும் வம்சாவளி இந்தியர்
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்
ஒருமுறை ஊடகத்தில் ரிஷி சுனக் பேசும்போது,"இந்து என்பதில் நான் பெருமைக்கொள்கிறேன். இந்துவாக இருப்பது எனது அடையாளம். எனது நம்பிக்கை எனக்கு பலத்தை கொடுக்கிறது, ஒரு பயனையும் தருகிறது. நான் யார் என்பதில் அதுவும் ஒரு பகுதி" என்றார். எனவே, தீபாவளி அன்று பிரதமராக தேர்வாகியிருப்பது அவருக்கு மிகவும் சிறப்பானதொரு தருமணமாகவே இருந்திருக்கும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் கட்வாலா கூறுகையில்,"இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இது கடந்த இரு தசாப்தங்களுக்கு முன் சாத்தியமே இல்லாத ஒன்று. இங்கிலாந்தின் மக்கள் சேவையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் என பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களாக, பல்வேறு இனப் பின்னணியில் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது இந்த தருணம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.
பிரிட்டீஷ் ஆசியர்களுக்கு இது மிகுந்த பெருமையை அளிக்கும். குறிப்பாக, ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் அரசியலில் முரண்பாடு இருக்கும் பிரிட்டீஷ் ஆசியர்களுக்கும் இது சிறப்பாமன தருணம்தான்" என்றார். சுந்தர் கட்வாலா இங்கிலாந்தின் எதிர்கால சிந்தனை குழுவைச் சேர்ந்தவர் ஆவார்.
42 வயதான சுனக், இந்தியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் வசிக்கும் இந்து வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார குடும்பங்களில் ரிஷி சுனக்கின் குடும்பமும் ஒன்று. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக் இன்று காலை பிரதமராக பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரிஷி சுனக்கிற்கு தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர் - யார் இந்த ரிஷி சுனக்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ