உக்ரைனின் மரியுபோலில் உள்ள எஃகு ஆலை முற்றுகையிடப்பட்டதகவும், 531 உக்ரைனின் பாதுகாவலர்கள் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறுகிறது. வெள்ளியன்று (2022, மே 20), மரியுபோல் மற்றும் எஃகு ஆலை இரண்டும் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இந்த செய்தியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் மொத்தம் 2,439 உக்ரைன் பாதுகாவலர்கள் சரணடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மரியுபோலில் உள்ள எஃகு ஆலையின் முழுக் கட்டுப்பாட்டையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது. 


இந்த ஆலையானது, மரியுபோல் நகரத்தில் உக்ரேனியர்களின் வசம் இருந்த மிகவும் முக்கியமான ஆலையாகும். உக்ரைனிடம் தற்போது இந்த நகரில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும், உக்ரைனின் வலுவான கடைசி கோட்டை இந்த எஃகு ஆலை என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா


மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த உக்ரேனியப் படைகளின் கடைசிக் குழு சரணடைந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழுவில் சுமார் 531 பேர் இருந்தனர்


ரஷ்ய ராணுவத்தின் இந்த முன்னேற்றமானது, அந்நாட்டின் மூன்று மாத கால முற்றுகையின் வெற்றியை குறிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "அசோவ்ஸ்டல் உலோக ஆலையின் பிரதேசம் ... முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது."


வெள்ளியன்று, ரஷ்யாவின்பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, மரியுபோல் மற்றும் எஃகு ஆலை இரண்டும் ரஷ்யர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்தார் என்று அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு


"தீவிரவாதிகள் பதுங்கியிருந்த ஆலை வளாகம், ரஷ்ய ஆயுதப்படைகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தன" என்று ரஷ்ய அறிக்கை கூறுகிறது.


மொத்தத்தில், கடந்த சில நாட்களில் 2,439 உக்ரைன் பாதுகாவலர்கள் சரணடைந்துள்ளதாக ரஷ்யத் தரப்பு கூறுகிறது.


உக்ரேனிய மற்றும் ரஷ்யப் படைகளுக்கு இடையேயான கடுமையான சண்டைக்கு மத்தியில் மரியுபோல் பல வாரங்களாக ரஷ்யப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், மரியுபோல் நகரத்தில் உணவு, மின்சாரம், தண்ணீர் என அனைத்தின் கையிருப்பும் மிகவும் குறைந்துவிட்டது. அசோவ்ஸ்டல் எஃகுத் தொழிற்சாலையில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை,  செஞ்சிலுவைச் சங்கமும் ஐ.நாவும் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் அமெரிக்கா, உக்ரைனுக்கு, கூடுதல் ராணுவ உதவிகளை வழங்குவதாக அண்மையில் அறிவித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.


மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR