ரஷ்யா உக்ரைன் போர்: தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா
Russia-Ukraine war: ரஷ்யா சனிக்கிழமை (மார்ச் 5) உக்ரைனில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நகரங்களான மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான தளங்களை அனுமதிக்கும் வகையில், ரஷ்யா சனிக்கிழமை (மார்ச் 5) உக்ரைனில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தற்காலிக போர்நிறுத்தம் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. "இன்று, மார்ச் 5, மாஸ்கோ நேரப்படி காலை 10 மணி முதல், ரஷ்ய தரப்பு போர் நிறுத்தத்தை அறிவித்து, மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கான மனிதாபிமான தளத்தை திறக்கிறது" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் - புடின்
முன்னதாக, மரியுபோல் நகரை பல நாட்களாக முற்றுகையிட்டுள்ள ரஷ்யப் படைகள், நகரின் மின்சாரம், உணவு, தண்ணீர், வெப்பப்படுத்தும் குளிர்கால பிரத்யேக செயல்முறைகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை துண்டித்திருந்தது. பயங்கர குளிர் வாட்டி வதைத்த குளிர்காலத்தில் இந்த நடவடிக்கை மக்களை பாடாய் படுத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிகைகள், இரண்டாம் உலகப் போரில் லெனின்கிராட் மீதான நாஜி முற்றுகையை ஒப்பிடத் தூண்டியது.
இதற்கிடையில், ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் நிலையிலும், உக்ரைனிய ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை நிறுத்த தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே ரஷ்யா இருப்பதாகத் தெரிகிறது. பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அணுஆயுதப் போராக இது மாறிவிடக்கூடாது என்ற அச்சமும் மேலோங்கி உள்ளது.
ரஷ்யா உக்ரைனிய அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் அச்சம் இன்னும் அதிகரித்தது. உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க எரிசக்தி துறை தனது ‘நியூக்லியர் இன்சிடண்ட் ரெஸ்பான்ஸ் குழு’ வை செயல்படுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR