போரை நிறுத்த முடியாது...சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ரஷ்யா நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதியன்று தாக்குதலை தொடங்கிய ரஷ்யா 22-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் போன்றவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் புடின் போரை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியது.
மேலும் படிக்க | ICJ on Russia War: போரை நிறுத்து ரஷ்யா! சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று உக்ரைன் போர் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. தற்காப்புக்காகவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது படையெடுத்துள்ளதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்ற நீதிபதி ஜோன் டோனோக் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்தது. ஆனால் சர்வதேச நீதிமன்றத்தின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த இரு தரப்பு ஒப்புதலும் தேவை எனவும், தாங்கள் இந்த உத்தரவை ஏற்கப்போவதில்லை எனவும் க்ரெம்ளின் செய்தித்தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR