ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன.சர்வதேச அளவில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை மற்றும் அரிசியின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷ்யா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 இந்நிலையில், தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா  ஐநா உடன்  செய்துள்ள ஒப்பந்தத்திற்குப் பிறகு, உணவு நெருக்கடியிலிருந்து உலகம் விடுபடக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ரஷ்யாவும் உக்ரைனும் தனித்தனி ஒப்பந்தங்களில் சனிக்கிழமை கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் உரங்கள் ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் உணவு தானியங்களின் விலையில் சிறிது குறையும், நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் உக்ரைன் அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் ஆகியோர் இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார் ஆகியோருடன் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அன்டோனியோ குட்டரெஸ், 'இது மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள ஒரு ஒப்பந்தம் ; உலகிற்கு மிகவும் தேவையான நிவாரணத்தை கொடுக்கும் நம்பிக்கை கதிர்' என்றார்.


மேலும் படிக்க | Video: ரஷ்ய ஷெல் தாக்குதலில் எரியும் பயிர்கள்; அணைக்க போராடும் உக்ரைன் விவசாயிகள்


ஐநா சபை மேற்கொண்ட மத்தியஸ்த நடவைக்கை காரணமாக, இப்போது கருங்கடல் வழியாக தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. உக்ரைனில் இருந்து வெளியேறும் தானியக் கப்பல்களை நிறுத்தப்போவதில்லை என ரஷ்யா தெளிவுபடுத்தியுள்ளது. கருங்கடல் வழியாக எந்த கப்பலையும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று இரு நாடுகளும் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது


கருங்கடலில் இருந்து தானியக் கப்பல்களின் இயக்கம் தடைப்பட்டதால் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் தானிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன, இந்தியா உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வரும் கப்பல்கள் பல நாடுகளுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்


மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ