கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அல்லகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்ய படையினர், சுமார் 5 மாத காலங்களாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டில் கடுமையான ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து உக்ரைன் விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க முயற்சிப்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை உக்ரைனின் முன்னாள் தூதர் ஓலெக்சாண்டர் ஷேர்பா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "உக்ரேனிய விவசாயிகள் மைக்கோலேவில் தினசரி ஷெல் தாக்குதலுக்குப் பிறகு தங்கள் பயிரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்" என்று அவர் பதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மிக ஆபத்தான 12 டன் சரக்குகளுடன் கிரீஸில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் சரக்கு விமானம்
வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:
Ukrainian farmers trying to save the harvest after the daily shelling in Mykolaiv. StandWithUkraine️ ArmUkraineNow StopRussiaNOW pic.twitter.com/TFJZIFR12D
— olexander scherba (@olex_scherba) July 18, 2022
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைக்க விவசாயி ஒருவர் டிராக்டரில் அமர்ந்து குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அதனை அணைக்க முயற்சிப்பதையும், மற்றொரு நபர் தீ பரவாமல் தடுக்க முயற்சிப்பதையும் வீடியோவில் காணலாம். ரஷ்ய ஏவுகணைகள் வீசப்பட்டு, பல விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் தீ பிடித்து எரிவதால், விவசாயிகள் தங்கள் பயிர்களை மீட்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
58-வினாடி நீடிக்கும் இந்த வீடியோவில், வயலில் இருந்து பெரும் புகை வெளியேறுவதைக் காணலாம். பகிரப்பட்டதிலிருந்து, ட்விட்டரில் பட்கிரப்பட்ட இந்த வீடியோ 65,000 பார்வையாளர்களையும் 1,500 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான கருத்துகள் மற்றும் ரீ-ட்வீட்கள் உள்ளன.திங்களன்று கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ