Russia - Ukraine War: கடந்த 9 மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை உலகமே உற்றுப் பார்த்து வருகிறது. ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் உக்ரைன் நகரங்களைத் தாக்கும் இடம். அதே நேரத்தில், உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால் இத்தனைக்கும் நடுவில் வேறு ஒரு பயம் அமெரிக்காவை கலங்க வைத்துள்ளது. உக்ரைனில் பெரிய அளவிலான இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நோவிச்சோக் விஷத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஊடக அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் அச்சம்


டெய்லி மெயில் பத்திர்க்கையில் வெளியான தகவலில், போர் பெருகிய முறையில் கியேவுக்கு ஆதரவாக முன்னேறி வருவதால், உக்ரைனை சரணடைய வைக்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேலும் சில ஆபத்தான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. அணுகுண்டு தாக்குதல் அல்லது டர்டி  வெடிகுண்டு தாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் புடின் நேட்டோவுடன் அணுசக்தி மோதல் நடவடிக்கையை தேர்ந்தெடுக்கும் முன்பு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறார் என்று விஷயம் அறிந்த ஆறு பேர் தெரிவிக்கின்றனர்.


ரஷ்யாவின் அத்தகைய தாக்குதலை கையாளும் வகையில், அதன் மேற்கத்திய கூட்டாளிகள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் செயல்படுவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ தெரிவித்துள்ளது. போர்க்களத்தில் ரஷ்யாவிற்கு மேலும் இழப்புகள்  ஏற்பட்டால் அல்லது புட்டினின் படைகள் மொத்தமாக சரிந்தால் ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று வாஷிங்டன் கணித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்


டெய்லி மெயில் பத்திர்க்கையில் வெளியான தகவலில், அத்தகைய தாக்குதலுக்கு மூலோபாயம் செய்யும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யா கடந்த காலத்தில் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களை மாஸ்கோ பயன்படுத்தக்கூடும் என்று நம்புகிறார்கள். இது தவிர எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மற்றும் முன்னாள் ரஷ்ய ராணுவ உளவுத்துறை அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் ஆகியோர் விஷம் வைத்து கொல்லப்பட்டனர் (இங்கிலாந்தின் சாலிஸ்பரியில்). இருவரும் Novichok என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷம் கொடுக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், இருவரும் அதில் இருந்து தப்பினர்.


அரசுக்கு எதிரானவர்களை முடக்கும் ரஷ்யா 


கடந்த காலங்களில், ரஷ்யா அரசுக்கு எதிரானவர்களை  முடக்க நோவிசோக் விஷத்தை பயன்படுத்தியது. பெரிய அளவிலான வன்முறை சம்பவங்களை நடத்தவும் இதைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். சில இரசாயனங்கள் அல்லது வெடிமருந்துகள் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தலாம்.


மேலும் படிக்க | வீங்கிய விரல்கள்... நடுங்கும் கால்கள்... புடின் உடல் நிலை குறித்த பகீர் தகவல்கள்!


மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR