உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில்,  ரஷ்யாவின் 'மிகவும் நெருக்கமான நாடு' அந்தஸ்தை ஜப்பான் முறையாக ரத்து செய்தது. சிவிலியன்கள் மீது ரஷ்ய இராணுவ  நடத்திய அட்டூழியங்களை வெளியாகியுள்ள நிலையில்,  டோக்கியோ புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவின் வர்த்தக அந்தஸ்தை அகற்றுவது மாஸ்கோவிற்கு எதிரான ஜப்பானின் சமீபத்திய தடை நடவடிக்கையாகும். புதிய தடைகள் கடந்த மாதம் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் எட்டு ரஷ்ய தூதர்கள் மற்றும் வணிக அதிகாரிகளை வெளியேற்றும் முடிவும் அடங்கும். ஜப்பான் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின் மூலம், ரஷ்யாவின் வர்த்தக நிலை தொடர்பாக ரஷ்யா மீதான அழுத்தம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகள் தனியாகவும் கூட்டாக  ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள நிலையில், ஜப்பானும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.  ஆனால் இந்த நடவடிக்கை மாஸ்கோவின் கோபத்தையும் தூண்டும்.


மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்


ரஷ்யாவை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் முடக்கம்


நூற்றுக்கணக்கான ரஷ்ய தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சொத்துக்களையும் ஜப்பான் முடக்கியுள்ளது. இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் ஏற்றுமதி உட்பட புதிய முதலீடு மற்றும் வர்த்தகத்தையும் தடை செய்தது. ரஷ்யாவின் நிலக்கரி இறக்குமதியை படிப்படியாக நிறுத்தும் திட்டத்தை ஜப்பானும் அறிவித்துள்ளது.


ரஷ்ய தூதர்கள் வெளியேற்றம்


ஜப்பானில் இருந்து வெளியேற்றப்பட்ட எட்டு ரஷ்ய தூதர்கள் டோக்கியோவில் உள்ள ரஷ்ய தூதரகத்திலிருந்து ஹனேடா சர்வதேச விமான நிலையத்திற்கு பேருந்தில் செல்வதைக் காண முடிந்தது, அங்கு அவர்கள் நாட்டிற்குத் திரும்ப ரஷ்ய அரசாங்க விமானத்தில் ஏறினர். ஜப்பான் ஏற்கனவே ரஷ்யாவின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானிடம் இருந்து முன்னாள் சோவியத் யூனியன் கைப்பற்றிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தீவுகள் பற்றிய பேச்சுக்கள் உட்பட டோக்கியோவுடனான சமாதான உடன்படிக்கை பற்றிய பேச்சுக்களை நிறுத்துவதாக மாஸ்கோ சமீபத்தில் அறிவித்தது.


அந்நிய செலாவணி சட்டத்தில் திருத்தம்


சொத்து முடக்கத்திற்கு உட்பட்டவர்கள், தாங்கள் வைத்திருக்கும் மெய்நிகர் கரன்சியை மாற்றுவதைத் தடுக்கும் அந்நியச் செலாவணிச் சட்டத்தில் திருத்தமும் நாடாளுமன்றத் தீர்மானத்தில் அடங்கும்.  இப்போரின் காரணமாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தாக்கம் ஏற்படும் என்பது தொடர்பான கவலைகள்   காரணமாக ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச முயற்சிகளில் ஜப்பான் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR